கல்லூரிகள் கடந்த 1-ந் தேதி முதல் திறக்கப்பட்டது. 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
தடுப்பூசி போடாதவர்களுக்காக கல்லூரிகளுக்கு நேரில் சென்றும் ஊசி போடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த சில நாட்களில் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்.
ஆனால் முதலாம் ஆண்டு மாணவர்கள் 18 வயதுக்கு குறைவானவர்கள். அவர்களுக்கு தடுப்பூசி போடு வதில்லை. எனவே முதலாம் ஆண்டு மாணவர்களை கல்லூரிக்கு வரவழைக்காமல் ஆன்லைனில் வகுப்புகளை தொடங்க சென்னையில் உள்ள பல கல்லூரிகள் முடிவு செய்துள்ளன.
வருகிற 16-ந் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க இருப்பதாக எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் கூறினார். கல்லூரி நோக்குநிலை மற்றும் தகவல் தொடர்பு திறன் பயிற்சியுடன் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
தொற்று நோய் தொடர்பான மன அழுத்தத்தை போக்க மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.
More Stories
பொறியியல் மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம்: உயர்கல்வித்துறை
தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் – 933 பேர் தேர்ச்சி