தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2003-ம் ஆண்டு மின்சாரத் திருத்தச் சட்டத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத்திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்திருத்தம், தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் உள்ளது.
மேலும் இது மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவும் உள்ளதால், இந்தச் சட்டத்திருத்த முன்வடிவினை திரும்பப் பெறுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை வலியுறுத்தி உள்ளார்.
More Stories
இடஒதுக்கீட்டு எதிராக மு.க.ஸ்டாலின்..!
அன்புமணி தாக்கு…!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்