January 23, 2025

மாரியப்பன் தங்வேலுவுக்கு அரசு வேலை- பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர்

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை தலைமைச்செயலகத்தில் வழங்கினார்.

தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப் 1 பிரிவில் தமிழக அரசு பணி வழங்கி உள்ளது.