கடந்த ஓராண்டு காலமாக டெல்லியில் முகாமிட்டு உயிர்க்கொல்லி நோயான கொரனா மற்றும் குளிர்காற்று மாசுபடிதல் இவைகளை கடந்து வாகனங்களில் குடிசை அமைத்து கடும் குளிரிலும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று தொடங்கிய போராட்டம் கடந்த ஓராண்டை கடந்து இப்பொழுது (பு9.புபு.சுபு) நிறைவேறியுள்ளது. பஞ்சாப், அரியானா, உத்திரப்பிரதேசம் விவசாயிகளுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கே கிடைத்த மாபெரும் வெற்றியாகும். எத்தகையோ முறை மத்திய அமைச்சர்கள் அழைத்து விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அப்பொழுதெல்லாம் தீர்க்க முடியாத பிரச்சனை இன்று இரண்டே வரிகளில் பிரதமர் மோடி அவர்கள் அறிவிப்பை வெளியிட்டு மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெரும் என்ற செய்தி போராட்டம் நடத்திய விவசாயிகளின் முகங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு அவர்களது போராட்ட குணங்களை புரிந்துக் கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது காலம் கடந்த முடிவு ஆனாலும் கனிவான அறிவிப்பாகவே விவசாயிகள் பார்க்க வேண்டும்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு முழுக்க முழுக்க விவசாயிகளையே முன்னிறுத்தி நடைபெற்ற இந்த போராட்டம் வெற்றிப் போராட்டமாகவே பார்க்க வேண்டும். இந்த மூன்று சட்டங்களை வாபஸ் பெற்றது என்பது மத்திய அரசுக்கு ஒரு வகையில் பின்னடைவாகவும் இன்னொரு வகையில் லாபமாகவும் அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விரைவில் மூன்று மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு செய்யும்.
- டெல்லிகுருஜி
More Stories
இந்த கரிகாலன் குறிவைக்க மாட்டான்! குறி வைத்தால் தப்பாது எம்.ஜி.ஆர் பாணியில்! எடப்பாடி பழனிசாமி..! அன்று ஜெயலலிதா கூறியதை இன்று அறிவித்துள்ளார்…!!
ம.பி.: 50,700 கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
சென்னையில் 9 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை கிடைக்கும் – வங்கி கணக்கு சரி பார்க்கும் பணி முடிந்தது