December 7, 2024

பிரதமர் மோடிக்கு வரவேற்பு நீட் தேர்வு என்னவாகும் மாணவர்கள் எதிர்பார்ப்பு! காங்கிரஸ் புலம்பல்!!

தமிழ்நாட்டில் உள்ள புதிதாக தொடங்க இருக்கும் மருத்துவ கல்லூரியை திறந்து வைப்பதற்காக 2022 ஆம் ஆண்டு ஜனவரி பனிரெண்டாம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு திமுக அரசு சிவப்பு கம்பளம் வரவேற்பிற்கு தயராகி கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் “நிஷீ ஙிணீநீளீ” மோடி என்று கருப்பு பலூன் பறக்க விட்டு கறுப்பு கொடி காட்டிய நேரத்தில் சாலை வழியாக செல்லவேண்டிய பிரதமர் மோடி வான்வழியாக பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வான் வழி பயணத்திற்கு அடிக்கலம் இட்டது திமுக தோழமை கட்சிகளின் எதிர்ப்பும் காரணமாக கூறப்பட்டது. தற்போது திமுக ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் மாணவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி அந்த சட்டம் ஆளுநர் மாளிகையில் காத்திருக்கிறது கையெழுத்துக்காக.

தற்பேது ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக கூறப்பட்டாலும் நீட்தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு நீட் தேர்வு குறித்து தனது மௌனத்தை கலைத்தால் ஒழிய ஆளுநர் கையெழுத்துப் போட்டு நீட் தேர்வை ரத்துசெய்ய முடியுமா? என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி அவர்கள் தமிழகம் வருவதை ஒட்டி அவருக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்க திமுகவும் திமுக அரசும் தங்களை தயார்ப்படுத்தி கொள்கிறது. இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு குறைந்து காணப்பட்டாலும் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதில் உறுதியாக இருக்கும் திமுக அரசு நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்து அந்த குழுவின் பரிந்துரையை ஏற்று பாஜக கட்சி ஆட்சியில் இல்லாத பிரதமர் மோடிக்கு எதிராக ஆட்சி நடத்தும் பல மாநில முதல்வர்களுக்கு திமுக சார்பில் குழு அமைத்து ராஜன் குழு கமிட்டி பரிந்துரையை ஒவ்வொரு மாநில முதல்வர்களுக்கும் வழங்கி சில காலத்தை கடத்திவிட்டது. அதே போல் ஜனாதிபதியை சந்தித்து வழங்குவதிலும் முயற்சிகள் மேற்கொண்டு ஜனாதிபதியை நேரில் சந்திக்க இயலாமல் அவரது அலுவலக அதிகாரிகளிடம் அந்த மனுவை வழங்கி நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு மனு அளித்துள்ளார்கள். இப்படி தொடர்ந்து பல முயற்சிகளை நாங்கள் எடுத்துவருகிறோம் என்பதை காட்டுவதற்காக திமுக முயற்சி செய்தாலும் மாணவர்கள் விஷயத்தில் காலம் தாழ்த்தாமல் ஒரு நம்பிக்கை தரும் அறிவிப்பை வெளியிட்டு மருத்துவ மாணவர்களுக்கு திமுக அரசு துணை நிற்கவேண்டுமே தவிர நீட் தேர்வு ரத்து செய்வோம் என்பதை தொடர்ந்து நீட்டித்துக் கொண்டு சென்றால் இந்த ஆட்சிக்கு வாக்களித்த மக்கள் ஆட்சியின் மீது மக்கள் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தும் சூழ்நிலை உருவாகி விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்புமுதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அவரது அமைச்சரவைக்கும் தார்மீக பொறுப்பும் கடமையும் உள்ளது என்பதை இந்த தருணத்தில் உணரவேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி அதன் மூலம் மருத்துவப் படிப்புக்கு தேர்வாகி தற்போது மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் பயின்று வரும் மாணவ மாணவிகள் எத்தகைய நிலையில் இருப்பார்கள் என்பதையும் நீட் தேர்வு ரத்தாகும் என்று நினைத்து நீட் தேர்வு எழுதி காத்திருக்கும் மருத்துவ மாணவர்களின் நிலை எத்தகைய பதட்டத்தில் இருக்கும் என்பதை அறிந்து உண்மை தன்மையை உரக்க சொல்வதற்கு இந்த அரசு தயங்ககூடாது என்பதே பல பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக தமிழக அரசு பொருளாதார தேக்க நிலை ஒருபுறம் மத்திய அரசு எதிர்ப்பு மறுபுறம் நீட் தேர்வு ரத்து என்பது இன்னொனுபுறம் இப்படி பல கோணங்களில் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறத. அதே நேரத்தில் மத்திய அரசை முழுவதும் பகைத்துக் கொண்டால் இந்த மூன்று கட்டங்களையும் தாண்டி தேர்தலில் மக்களுக்கு கொடுத்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு எவ்வாறு சாத்தியமாகும் என்பதை அறிந்துக் கொண்டு மத்திய அரசோடு ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்தி அதன் மூலம்மாநில அரசு திட்டங்களை நிறைவேற்றுவது என்பதற்காக தான் தமிழகம் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பும் உபசரிப்பும் நடைபெறுகிறதோ என்று தமிழ்நாட்டு மக்கள் கருதுகிறார்கள். நேற்றும் இன்றும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கொடுத்து வரும் முக்கியத்துவம் முன்னுரிமை இனி வருங்காலங்களில் திமுக தலைமை வழங்குமா என்ற சந்தேகம் தமிழ்நாட்டு காங்கிரஸார் மத்தியில் எழுந்துள்ளது.

திமுக ஆட்சிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நீட் தேர்வு ரத்து என்பதை நிறைவேற்றப்படவில்லையென்றால் நிறைவேற்ற முடியாமல் போனால் அரசியல் ரீதியாக கடும் இழப்புகளையும் நெருக்கடியும் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகும்.

– டெல்லிகுருஜி