தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் நடிப்பில் உருவாகி இருக்கும் நெற்றிக்கண் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை ‘அவள்’ பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பார்வையற்றவராக இருக்கும் நயன்தாரா சீரியல் கொலைகாரன் ஒருவனை சரியாக கண்டுபிடிப்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன் என்பது டிரைலரில் தெரிகிறது.
நயன்தாராவின் மிரட்டலான நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த டிரைலர் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது. மேலும் இப்படம் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாக இருக்கிறது.
More Stories
ஜெயிலர் வெற்றி.. காரை பரிசாக வழங்கிய கலாநிதி மாறன்
அரசியலுக்கு தான் முன்னுரிமை- நடிகை ஜெயசுதா பேட்டி
தென்னிந்திய படங்களில் நடித்ததால் என்னை பாலிவுட் கைவிட்டது- மனம் திறந்த ஜெனிலியா