November 2, 2024

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம், வெண்கலம்- பேட்மிண்டன் வீரர்கள் சாதனை

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று காலையில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், தற்போது மேலும் இரண்டு பதக்கங்களை வசமாக்கி உள்ளனர்.

பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார். இறுதிப்போட்டியில் இவர் பிரிட்டன் வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார். மற்றொரு இந்திய பேட்மிண்டன் வீரர் மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் இந்திய அணி டோக்கியோ பாராலிம்பிக்கில் வென்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.