November 3, 2024

பாஜகவில் குஷ்பு சேர்ந்த ரகசியம்!

திமுக, காங்கிரஸ், பாஜக தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கி இருக்கும் திரைப்பட நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் அதிக அளவில் பெரிய பதவி வகித்தவர். மும்பையை பூர்வீகமாக கொண்ட குஷ்பு தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்ததின் மூலம் தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களை கவர்ந்தார். திருச்சியில் ஒரு ரசிகர் குஷ்புக்கு கோயில் கட்டினார். மதுரையில் பல சிற்றுண்டி விடுதிகளில் குஷ்பு இட்லி என்றே அறிமுகம் செய்தார். அந்த அளவிற்கு மிக குறுகிய காலத்தில் தமிழக ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் அரசியல் ஆர்வம் குஷ்புவையும் விட்டு வைக்கவில்லை . நிரந்தரமாக சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்டு தமிழகத்தை புகுந்த வீடாகவும், மும்பையை பிறந்த இடமாகவும் கருதி தமிழகத்திலேயே நிரந்தர குடியிருப்பு வாசியாக இருந்துவிட்டார். பல்வேறு விமர்சனங்களுக்கு ஆனாக குஷ்பு அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்த பொழுது அவரை முழுவதும் பயன்படுத்துவதை தமிழக காங்கிரஸ் கட்சி தவிர்த்து வந்தததுடன் மக்களிடம் நெருங்கி பழகுகின்ற வாய்ப்பை வழங்காமலேயே ஒதுக்கி வைத்திருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று ஆருடங்கள் கூறப்பட்டது. அது சமார்த்தியமாக தடுக்கப்பட்டு விட்டது. இதில் மனமுடைந்த குஷ்பு தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தற்பொழுது தமிழகத்தில் பாஜக கட்சியில் கடுமையான முயற்சியில் பல்வேறு கட்சிகளிலிருந்து ஒரு சில நபர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணியில் அதி தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் குஷ்புவும் தற்பொழுது பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஐயப்பன் தலைமையில் இயங்கி வரும் செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பெரேஷன் நிர்வாகத்தின் இயக்குனராக இருக்கும் சுந்தருக்கும், குஷ்பு பாஜக இணைந்ததற்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கு எழுகின்றது. இது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது.