இம்ரான்கானின் சீனா பயணம் இரு நாட்டு வர்த்தக இணைப்புகளையும் பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்கும் என செனட் தலைவர் சாதிக் சஞ்சராணி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாடு தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
பாகிஸ்தானும் சீனாவும் நட்புறவு நாடுகளாக திகழ்ந்து வருகின்றன. இதனால் நிதி நெருக்கடியை சமாளிக்க சீனாவிடம் நிதி கேட்க இம்ரான்கான் முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து அவர் அடுத்த மாதம் தொடக்கத்தில் சீனா செல்ல திட்டமிட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் பல்வேறு திட்டங்களில் அதிக முதலீடுகளை பெரும் வகையில் சீனா நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் போடவும் அவர் இந்த பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
இம்ரான்கானின் சீனா பயணத்தை அந்நாடு வரவேற்றுள்ளது. இது குறித்து பாகிஸ்தானில் செனட் தலைவர் சாதிக் சஞ்சராணி கூறும் போது, இம்ரான்கானின் சீனா பயணம் இரு நாட்டு வர்த்தக இணைப்புகளையும் பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.
பண நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளது. இம்ரான்கான் சீனா பயணம் மூலம் பீஜிங் செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
More Stories
இடஒதுக்கீட்டு எதிராக மு.க.ஸ்டாலின்..!
அன்புமணி தாக்கு…!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்