புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அமைச்சரவையிலும், கலைஞர் கருணாநிதி அமைச்சரவையிலும் அமைச்சராக கடந்த கால் நூற்றாண்டுகளாக தமிழக அமைச்சர் அவையில் அமைச்சர் பதவி வகித்த பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் தனது 84வது பிறந்த நாளை சென்னை அசோக்நகரில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடினார். அவருக்கு முக்கிய பத்திரிகையாளர்களும், அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து கூறினார்கள். மழைக்காலம் என்பதால் தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறியவர்களே பெரும்பாலனவர்கள். இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஐ.நா.சபையில் உரையாற்றும் வாய்ப்பை பெற்றவர். ஐ.நா.சபையில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பெயரை பதிவு செய்யவேண்டும் என்றால் அதற்கு ஏதேனும் பிரேத்யேக காரணம் இருக்க வேண்டும். இல்லையென்றால் அப்படி ஒரு பதிவை ஐ.நா.மன்றத்தில் பதிவிட முடியாது. ஆனால் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை பதிவு செய்யததோடு இலங்கை பிரச்சனையையும் ஐ.நா.சபையில் பதிவு செய்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் என்பது வரலாறு. இதனால் இவர் எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாகவும் எம்.ஜி.ஆருக்கு அரசியல் ஆலோசகராகவும், இந்தியாவின் பிரதமர் அன்னை இந்திராகாந்தி அவர்களுக்கும், ராஜுவ்காந்தி அவர்களுக்கும் நெருங்கிய நண்பராக இருந்த பெருமை இவருக்கு உண்டு. இவ்வளவு பெரும் புகழும் பெற்று பதவிகளுக்கு ஆசைப்படாமல் தன்னை நம்பியவர்களுக்கு நல்ல பல ஆலோசனைகளை எடுத்துக் கூறி வெற்றி காண்பதில் வல்லவராக திகழ்ந்தவர். அவரது பிறந்த நாளில் (84) அக்னிமலர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
-ஆர்
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…