மரணமா மருத்துவ படிப்பா? என்ற ஊசலாட்டத்தில் மருத்துவ படிப்பிற்கான மாணவ மாணவிகள் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பேர் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு ஆட்சியாளர்கள் எப்படியும் நீட் தேர்வுக்கு விடை காண்பார்கள் என்று காத்திருந்தார்கள் இருந்தாலும் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை அனுப்பிவைத்தார்கள். ஆனால் மத்திய அரசோ நீட் தேர்வை நடத்துவதை கட்டாயம் என்று அறிக்கை வெளியிடுகிறது. மக்களுக்காக ஆட்சியா ஆட்சி இருப்பவர்களுக்காக மக்கள் வாழ்க்கையா என்ற கேள்வி எழுகிறது. மரண பயத்துடன் கடந்த ஆறுமாத காலமாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பு தேர்வு எழுதுவதாக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நோயின் தொற்று பரவலாகி கொண்டே இருக்கிறது என்கின்ற அறிவிப்பு ஒருபுறம் அச்சத்தை தோற்றுவிக்கிறது. தங்கள் எதிர்காலம் என்னாகுமோ என்கின்ற மாணவர்களின் அச்சம் கட்டாயம் நீட் தேர்வை எழுதியாக வேண்டும் என்ற நிலை மாணவர்களை தனியாக தேர்வு மையங்களுக்கு பி வைக்கவேண்டும் அதற்கான ஏற்பாடு என்ன என்கின்ற கவலையும் அச்சமும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஏற்படுகிற அச்சம் இவைகளையெல்லாம் கடந்து கருணைகாட்ட மறுக்கும் மத்திய அரசின் உறுதியான முடிவும் நீட் தேர்வு எழுதுவதும் கட்டாயம் என்கின்ற அறிவிப்பும் ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் மீது ஏற்றப்படுகிற சுமையாகவே பார்க்கப்படுகிறது. மரணத்தை வென்று கொரனாவை கொன்று அரசின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி சகோர சகோதரிகளை உங்கள் கடமையாற்றுங்கள் என்று கேட்டுக் கொள்வதை தவிர வேறுவழியில்லை.
நீட் தேர்வு எழுதி அனைவரும் தங்கள் விருப்பம் நிறைவேற அக்னிமலர்கள் வாழ்த்துகிறது. “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே! உச்சிமீது வான் இடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை” என்ற மகாகவி பாரதியை மனதில் நிறுத்திக்கொண்டு வெற்றிக் கனியை பறித்துக் கொண்டு வாருங்கள்.
More Stories
பொறியியல் மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம்: உயர்கல்வித்துறை
தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் – 933 பேர் தேர்ச்சி