டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக 11 வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சத்தர்பூர் தொகுதியில் பிரஹ்ம் சிங்தன்வார் போட்டியிடுகிறார். தொடர்ந்து, பதார்பூர் தொகுதியில் ராம் சிங் நேதாஜி, லட்சுமி நகர் தொகுதியில் பிபி தியாகி, சீலாம்பூர் தொகுதியில் சவுதிரி சுபாயிர் அகமது, சீமா புரி தொகுதியில் வீர் சிங் திங்கன், ரோஹ்டாஸ் நகர் தொகுதியில் சரிதா சிங், கோண்டா தொகுதியில் கவுரவ் சர்மா, விஷ்வாஸ் நகர் தொகுதியில் தீபக் ஷிங்லா, கரவால் நகர் தொகுதியில் மனோஜ் தியாகி, கிராரி தொகுதியில் அனில் ஜா, மாடியாலா தொகுதியில் சுமேஷ் ஷோகீன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
More Stories
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உச்சபட்ச தண்டனை இதுதான்!
அரசு வழக்கறிஞர் விளக்கம்
மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி – அன்புமணி ராமதாஸ்
தயார் நிலையில் இராணுவம்
மோடியிடம் வாலாட்டாதே!
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை!