April 27, 2025

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை சூரியபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 15ம்தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான நேற்று மாலை புஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி தேவி, பூதேவி தாயார்களுடன் மாடவீதியில் எழுந்தருளி பவனி வந்தார். கோயில் யானைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நடந்தது.பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து இன்றிரவு சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா நடைபெறும்.