தமிழக அரசியலில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும், எதிர்கட்சியாக இருக்கும் போது ஒருவிதமான நிலைப்பாடும் இப்படி இருவித நிலைப்பாட்டை மேற்கொள்ளும் இயக்கங்களாக திமுக கழகமும் அதிமுக கழகமும் கடந்த 60 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் ஆட்சியை நடத்திவந்துள்ளனர். இத்தகைய இரண்டு கட்சி, இரண்டு காட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டவேண்டும் என்று தமிழ்நாட்டு இளைஞர்கள் முடிவுக்கு வந்துள்ளார்கள். இதன் வெளிப்பாடு தான் கடந்த காலங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம். கடல் அலையே மிரண்டுப் போன மக்கள் தலைகளில் கூட்டம் மத்திய அரசை தடுமாற வைத்துள்ளது. புதிய சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு தடையில்லை என்று தமிழக அரசு அறிவித்தது நினைவிருக்கலாம். தற்போதைய புதிய ஆட்சி வந்தப் பிறகு ((திமுக) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதற்கெடுத்தாலும் ஒரு குழுவை நியமித்து அந்த குழுவில் ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளையும், நீதிபதிகளையும் தலைவர்களாக நியமித்து அறிக்கை கேட்டுக் கொண்டிருக்கிறார். இது மட்டும் அல்லாமல் முதலமைச்சரின் அலுவலக அதிகாரிகளான நம்பர் பு, நம்பர் சு, நம்பர் 3 ஆகியோர்கள் ஒட்டுமொத்த தமிழக நிர்வாகப் பொறுப்பையும் தங்கள் மேற்பார்வையில் எடுத்துக் கொண்டு நிர்வகித்து வருகிறார்கள்.
அமைச்சர்களின் வேலையை குறைத்து முதலமைச்சரின் வேலையை அதிகப்படுத்தி பொது வெளியில் படம் பிடித்து காட்டுகிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க ஒன்று சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தில் சென்னை நகரம் சிக்கி கொண்டு தவித்த பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்லாம் நேரில் சென்று மழையிலும், வெள்ளத்திலும் நனைந்தப்படி ஆறுதல் கூறிய புகைப்படங்கள் தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாகவும், பத்திரிகைகளில் புகைப்படங்களாகவும் பொதுமக்கள் பார்வைக்கு முன்னிறுத்தப்பட்டது. இதனை அறிந்த எதிர்கட்சியான அதிமுகவும் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவரான ஒ.பன்னீர்செல்வமும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு நிவாரணமும் வழங்கினார்கள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் வன்னியர்களுக்கு பு0.5 சதவிகித இடஒதுக்கீடு உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து “ஜெய்பீம்“ என்ற திரைப்படம் வெளியிடப்பட்டு தலித்துகளுக்கும், வன்னியர்களுக்கும் மோதல் இருப்பதை போல் காட்சிகள் அமைத்து உண்மை சம்பவத்தை பொய் சம்பவமாக திரித்து திரைக கதையாக அமைத்து திரைப்படமாக வெளியிட்டு வன்னிய இளைஞர்களின் இதயங்களை காயப்படுத்திருக்கிறார்கள். இத்தகைய இரண்டு செயல்களையும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் தெரிந்தும் தெரியாமலும் அறிந்து கண்டு கொள்ளாமலும் மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்ததோடு ஒரு சமுதாயத்தின் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை தங்கள் வீட்டில் விழாக்கள் போல் நடத்தியது இரண்டு கட்சிகளுக்கும் எதிரான பிரச்சனையாக திசைமாறிவிட்டது. இதனால் லட்சகணக்கான வன்னியர் இதயத்தில் ஒருவிதமான புயலை தோற்றுவித்துள்ளது. இதன் விளைவு சாதி, மதம், மொழி, இனம் இவைகளை கடந்து அரசியல் கட்சிகளுக்கு ஒரு சவாலாகவும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி இரு கட்சிகளுக்கும் தங்கள் எதிர்ப்பையும் இளைஞர்கள் வெளிப்படுத்தி வருவதோடு எத்தனை சங்கங்கள் இருந்தாலும் அத்தனையும் ஒர் அணியில் திரட்டி அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கையும், சவாலும் விடுகின்ற அளவிற்கு ஒற்றுமையை உருவாக்க முயற்சித்து வருகிறார்கள்.
குறிப்பாக பல்வேறு அரசியல் கட்சிகளில் இடம் பெற்றிருக்கும் வன்னியர் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள், வன்னியர் வளர்ச்சிக்கான இயக்கங்கள் என்று கூறிக்கொண்டு வன்னியர்களுக்காக குரல் கொடுக்காமல் இருப்பதை கண்டு அரசியல் இயக்கங்கள் மீது அதிருப்தியும் வேதனையும் கொண்டு ஊருக்கு உபதேசம் செய்யும் வழக்கத்தை கைவிட்டு களத்தில் நேரடியாக இறங்கி தமிழக அரசியலில் புதிய வேகத்தையும் ஒற்றுமை உணர்வுகளையும் உருவாக்கிட “விஙிசி (க்ஷி) பு0.5 (சு0) திமீபீமீக்ஷீணீtவீஷீஸீ சு0சுபு” என்ற அமைப்பின் மூலம் தமிழக அரசியலில் விழிப்புணர்வை ஏற்படுத்தி புரிந்துணர்வை உருவாக்கி இளைஞர்களை ஒன்றுப்படுத்தி புதிய பாதையில் பயணிக்கப் போவதாக ஒருசில வன்னிய அமைப்புகள் இளைஞர்களை அணி திரட்டும் முயற்சித்து வருகிறார்கள் என்பதை தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் பு0.5 சதவிகித்தை உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு கிடைத்திட முயற்சி செய்து அதன் மூலம் இந்த ஆட்சியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர்களை கைதூக்கி விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். (தமிழகம் முழுவதும் பு5 மாவட்டங்களில் வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் மக்களிடம் நேரில் சந்தித்து இடஒதுக்கீடு ரத்து குறித்து கேள்வி எழுப்பிய போது நமக்கு கிடைத்த தகவல்கள் மேலே குறிப்பிடப்பட்டவை.)
– டெல்லிகுருஜி
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…