December 7, 2024

தமிழக அமைச்சரவை மாற்றம் வருமா? காத்திருக்கும் திமுக வினர்

தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்களா? தற்போதைய அமைச்சர்களில் ஒருசிலர் விடுவிக்கப்படுவார்களா? சில அமைச்சர்களுக்கு இலாகா மாற்றி அமைக்கப்படுமா? என்ற கேள்விகள் சென்னை கோட்டை வட்டாரத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதே போல் பல்வேறு அமைச்சர்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உதவியாளர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. சில அமைச்சர்கள் மட்டுமே உதவியாளர்களை நியமித்துள்ளார்கள். இன்னும் சில அமைச்சர்கள் உதவியாளர்களை கூட நியமிக்காமல் இருந்து வருகிறார்கள். தீபாவளிக்குப் பிறகு புதிய அமைச்சர்கள் நியமனம் அல்லது இலாக்கள் மாற்றம் இருக்கும் என்பது உறுதியாக தெரிகிறது.

– சாமி