[responsivevoice_button voice=”Tamil Male”]சேலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தலைமையில் ஊர்வலம் நடந்துள்ளது. இந்த ஊர்வலத்தின் போது ஆளும் கட்சியான தி.மு.க. தங்களது கோட்பாடுகளான கடமை, கண்ணயம், கட்டுப்பாடு இம்மூன்றையும் முறையாகக் கடைப்பிடித்ததை நாம் பாராட்டியே தீர வேண்டும். அதாவது பெரியார் செய்த காரியத்திற்காக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அவரையும் விட்டுக் கொடுக்காமல் பேசி, தமிழக முதல்வர் கருணாநிதி தம் கடமையைச் செய்தார். இந்த ஊர்வலத்தின் போது இந்த சீர்திருத்தவாதிகளுக்கு அசம்பாவிதமாக எதுவும் நேர்ந்துவிடாமல் போலீசார் மிகவும் கட்டுப்ப-ாட்டுடன் பாதுகாப்பு அளித்தார்கள்.
கண்ணியத்தைப் பற்றியோ நாம் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. திமுகவுக்கு இல்லாத கண்ணியம் வேறு யாருக்கு இருக்கிறது? நம்மையெல்லாம் கடைத் தேற்றவும் நமக்கு நல்ல புத்தி புகட்டவும் இம்மாதிரி ஓர் ஊர்வலத்தை திமுக அரசின் மனப்பூர்வமான ஆசிகளுடன் நடத்திக் காட்டிய பெரியாருக்கு நாம் எப்படித்தான் நன்றி செலுத்துவது? சேலத்து மக்களின் மூடநம்பிக்கைகள் மட்டும் ஒழிந்தால் போதுமா?- தமிழ்நாட்டின் மற்ற இடங்களிலும் மூடநம்பிக்கை கொண்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறர்கள். அவர்களும் பார்த்துப் பயனடையவும், மூட நம்பிக்கைகள் அழிந்து, அவர்கள் நல்லறிவைப் பெறவும் இதுபோன்ற ஊர்வலங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தொகுதியிலும் நடக்க வேண்டமா? இதேபோல கிறிஸ்துவ மதத்திலும் இஸ்லாம் மதத்திலும் உள்ள மூட நம்பிக்கைகளையும் ஒழிப்பதற்காக ஊர்வலங்கள் நடத்தப் போவதாகப் பெரியார் அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் வேறு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இம்மாதிரியான ஊர்வலங்கள் நடத்த அனுமதிக்க மாட்டார்கள்.
நாமெல்லொரும் கடவுள் பக்தியோடு இருந்து பாழாகி-விடுவோம். ஆகவே, நம் மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும், இம்மாதிரியான ஊர்வலங்கள் ஒவ்வொரு ஊரிலும் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறவர்களும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். பெரியாரையும் திமுகவையும் தவிர வேறு யாராலும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கவே முடியாது. இப்படிப்பட்ட ஒரு மாபெரும் நன்மையை மக்களுக்குச் செய்ய முனைந்திருக்கிற ஒரு கட்சியை வோட்டுப் போட வோட்டுச் சாவடிக்குப் போகும்போது நினைவில் வைத்துக் கொள்ளா விட்டால் அப்புறம் நமக்கு விடிவு காலமே கிடையாது.
நன்றி: ‘துக்ளக்’
More Stories
இடஒதுக்கீட்டு எதிராக மு.க.ஸ்டாலின்..!
அன்புமணி தாக்கு…!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்