May 26, 2024

சொன்னாா்கள்

[responsivevoice_button voice=”Tamil Male”]ஜனநாயக நாடான இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. மிகப் பெரிய நடிகரான ரஜினிக்கு தனது கருத்தை சொல்ல உரிமை உண்டு. பலமுறை பொது நிகழ்ச்சிகளில் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசியுள்ளார். ‘துக்ளக்‘ விழாவில் அவர் பேசி 4 நாட்களுக்குப் பிறகு அதை பெரிதுபடுத்தியுள்ளனர். ரஜினியின் கருத்துக்கு- மாற்று-க் கருத்து இருந்தால் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கலாம். அதற்கு மாறாக வீட்டை முற்றுகையிடுவது, மன்னிப்பு கேட்குமாறு வற்புறுத்துவது போன்ற செயல்களை ஏற்க முடியாது. இது கண்டனத்துக்குரியது. மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் மதித்தவர் பெரியார். தன் மீது செருப்பு வீசப்பட்ட போது, மற்றொரு செருப்பை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள். அதையும் வீசு. நானாவது பயன்படுத்திக் கொள்கிறேன் என்று பக்குவமாய் பதிலடி கொடுத்தவர் பெரியார். இப்போது பெரியார் இருந்திருந்தால் தன்னை முன்வைத்து ரஜினிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்டித்திருப்பார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, தனது ட்விட்டர் பக்கத்தில் பெரியாரை புகழ்பவர்கள், தங்களது தலையில் எதுவும் இல்லை என்பதை உணராதவர்கள். பெரியார் ஆங்கிலேயர்களுக்கு ஏஜென்டாக இருந்தவர். ஆனால், இப்போது பெரியாரை மிகப் பெரிய தலைவர் போல சித்தரிக்கின்றனர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். ரஜினியை மன்னிப்பு கேட்கச் சொல்பவர்கள், சட்டம் தெரிந்த முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜுவை மன்னிப்பு கேட்கச் சொல்வார்களா? அவரது வீட்டை முற்றுகையிடுவார்களா? ரஜினியைத் தவிர வேறு யாராவது பெரியார் குறித்து இவ்வாறு பேசியிருந்தால் அதை இந்த அளவுக்கு பெரிதுபடுத்தியிருக்க மாட்டார்கள். – நடிகை குஷ்பு

“திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்திற்குள் தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருது பெறுவேன் என்று கனவிலும் நான் எதிர் பார்க்கவே இல்லை. இதேபோன்று சிறந்த நடிகைக்கான விருதை பிலிம்பேர் பத்திரிகை வழங்கிய போது கூட நேரில் சென்று வாங்க வாய்ப்பின்றி ரஜினிசாருடன் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். வெகு சீக்கிரத்தில் இந்த அங்கீகாரம் கிடைத்தது பெருமையாக இருக்கிறது. உண்மையில் சாவித்திரி அம்மாவின் ஆசியால்தான் இந்த புகழ் கிடைத்ததாகவே கருதுகிறேன். நான் நடிக்க வந்ததற்கு என் அம்மா மேனகாவும் ஒரு காரணம். அவர் நடித்த படங்களை பார்த்தது முதல் சிறு வயதிலிருந்தே நடிகையாக வேண்டுமென்ற ஆசை எனக்குள் இருந்தது. மேலும் எனக்கு தூண்டுதலாக இருந்தவர் என் அம்மாவின் சகோதரர் கோவிந்த அங்கிளும் காரணமாவார். சாவித்திரியாக நடிக்க என்னை அணுகிய போது முதலில் மறுத்தேன். கோவிந்த் அங்கிள் தான் எனக்கு நம்பிக்கையூட்டினார். கூடவே இயக்குநர் நாக் அஸ்வின் மகாநடி திரைக்கதை முழுவதையும் கொடுத்து என்னை நடிக்கச் சொன்னார். இருந்தாலும் இவ்வளவு பெரிய கதாபாத்தி-ரத்தை ஏற்று நடிப்பது முடியாத காரியம் என்றேன். வலுவான அந்த பாத்திரம் எனக்கு பயத்தைத் தந்தது. ஆனால் இயக்குனர் விடவில்லை. வேறுயாரும் இந்த பாத்திரத்திற்குப் பொருத்தம-£னவராக எனக்குத் தெரியவில்லை என்று கூறியதோடு நம்பிக்கையை வளர்த்தார். எனக்கும் சாவித்திரி அம்மாவுக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் தோன்றியது. அவரது வரலாற்றை மீண்டும் முழுமையாகப் படித்தேன். சரியென்று ஒப்புக் கொண்டேன். அவர் நடித்த பல படங்களின் கிளிப்பிங்ஸ்களை பார்த்தேன். சிறுவயதில் அவர் நடித்த ‘மாயாபஜார்’ படம் பார்த்தது நினைவில் இருந்தது. அந்தப் படத்தின் சில காட்சி படத்திலும் இடம் பெறுவதை உணர்ந்தேன். அவரது குடும்பத்தினரை சந்தித்து மேலும் அவரைப் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்தேன். இன்னும் உள்ள அன்றைய நடிகர்களிடம் அவருடன் நடித்த அனுபவங்க-ளை கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவருக்கும் எனக்கும் உள்ள சில ஒற்றுமைகள் என்னவெனில் எனக்கும் அவரைப் போலவே கிரிக்கெட் விளையாட்டிலும் நீச்சலடிப்பதிலும் ஈடுபாடு உண்டு. சாவித்திரி பாத்திரத்தை நான் சிறப்பாக ஏற்று நடித்து வெற்றிப் பெற்றதில் பலருக்கும் பங்குண்டு. சிறந்த நடிகைக்கான விருது பெற்றதால் அடுத்தடுத்த படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கெனவே நடித்த படங்களைவிட அடுத்து நடிக்கும் படங்கள் சிறப்பாக இருக்க வேண்டு-மென்று நான் எதிர்பார்ப்பதில் தவறில்லையே? – நடிகை கீர்த்திசுரேஷ்