September 18, 2024

செய்தி துளிகளும் சுவாரசியமான தகவல்களும்!

உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகுமா? அல்லது திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்று அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் நேரடி வாக்களிப்பு மூலம் நடைபெறுமா? அல்லது மறைமுக தேர்வு மூலம் நடைபெறுமா? (கவுன்சிலர்) என்ற கேள்விக்கு மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்ற குழப்பத்தில் அரசியல் கட்சிகள் காத்திருக்கிறது.

அதிமுக உட்கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது. நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்வமுடன் பங்கேற்று விண்ணப்பம் செய்து போட்டியின்றி தேர்வாகி வருகிறார்கள். சில இடங்களில் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களுக்கு அழைப்பதில் கூட பலர் ஆர்வம் காட்டாமல் தாங்களாகவே தேர்தலை நடத்தி முடித்துவிடுகிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அதன் செயல்பாடு எந்த அளவில் இருக்கிறது என்பது பகிரங்கமாக தொண்டர்கள் தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் கட்சியின் மாநில தலைமை அத்திப் பூர்த்தார் போல் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முழு நேர அரசியலாக எப்பொழுது செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுகிறது. இன்னும் தொண்டர்களுக்கும் தலைமைக்கும் உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர கோஷ்டிக் காரணம் குறைந்தப்பாடில்லை. உள்ளாட்சி நகர்மன்ற தேர்தல் குறித்து எந்தவித சிறப்பு ஆலோசனையும் இதுவரை நடைபெறுவதாக அறிகுறியே இல்லாமல் அமைதி நிலவுகிறது.

விஜயகாந்தின் தேமுதிக கட்சிக்கு விரைவில் செயல்தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அப்படி நியமிக்கப்பட்டால் விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரன் செயல்தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் வேறு தலைவர் அறிவிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கான இறுதி முடிவை கேப்டன் விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மாநகராட்சி, நகர்மன்றம், உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் தேமுதிக தனித்து போட்டியிடும் என்ற அறிவிப்பு கட்சியினர் மத்தியில் ஒருபுறம் மகிழ்ச்சியும் இன்னொருபுறம் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

– மிஸ்டர்மாருதி