சென்னையின் பல்வேறு பகுதிகளில் “லைட் மெட்ரோ” அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகருக்கான புதிய போக்குவரத்து திட்டத்தில் அண்ணா நகர், தி.நகர் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் லைட் மெட்ரோ அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 2.50 லட்சம் பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் மதராஸ் மாகாணத்தில் இயக்கப்பட்ட ட்ராம் வண்டிகளின் நவீன வடிவமே லைட் மெட்ரோ ஆகும். சுரங்கம் மற்றும் உயர்மட்ட பாதை இல்லாமல் சாதாரணமாக சாலையிலேயே செல்லும் வகையில் லைட் மெட்ரோ அமைக்கப்படும். சாலையின் ஓரத்தில் அல்லது மையப்பகுதியில் தண்டவாளம் அமைத்து மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் லைட் மெட்ரோ அமையும். மெட்ரோ திட்டங்களோடு ஒப்பிடுகையில் மூலதன செலவு குறைவாகும். பொது போக்குவரத்து பயன்பாடு, வாகன நிறுத்த வசதிகள், நடைபாதை வசதி என 10க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
More Stories
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் பங்கேற்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு:
மாணவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக நீட் பயிற்சி