December 6, 2024

சுல்தான் படத்தின் அப்டேட்

கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் சு-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.