January 26, 2025

சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும்- பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அருணபதி கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் தொடர்பாக தண்டபாணி மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். ஆணவ படுகொலை விவகாரங்களில் சாதிய பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தொடரும் இதுபோன்ற சாதிய ஆதிக்க ஆணவ படுகொலைகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.