[responsivevoice_button voice=”Tamil Male”] பா.ஜ.க. புதிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு
இந்திராகாந்தி, அவசரநிலையை பிரகடனம் செய்தபோது, அதனை எதிர்த்து நாடு தழுவிய பிரசாரம் செய்தவர், ஜெயப்பிரகாஷ் நாராயணன். இதற்காக ‘சம்பூர்ண கிரந்தி’ என்ற அமைப்பை ஆரம்பித்தார், ஜெயப்பிரகாஷ். அதில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கினார், பா.ஜ.க.வின் புதிய தலைவராக இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.பி.நட்டா. இமாச்சலபிரதேச மாநிலத்தில் பிறந்த இவர் படித்தது, பீகார் மாநிலத்தில்.. பாட்னாவில்தான் ஆரம்பக்கல்வி பயின்றார். அங்குள்ள கல்லூரியில்தான் பி.ஏ. படித்தார். மாணவப்பருவத்திலேயே பா.ஜ.க.வின் மாணவ அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1977 ல் பாட்னா பல்கலைகழக மாணவர் சங்க செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இமாச்சலபிரதேச சட்டபேரவை உறுப்பினராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டுள்ள நட்டா, வன அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர்..
மோடி முதன் முறையாக பிரதமரானபோது, அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 5 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க.தலைவராக பதவி வகித்த அமித்ஷாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு மத்தியில் முடிந்து விட்டது. பாரதிய ஜனதா கட்சியில் ஒருவர் இரண்டு பதவிகளில் நீடிக்க அதன் விதிகள் அனுமதிக்காது. இருப்பினும் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க.அமைப்பு தேர்தல் நடக்காததால்,மத்திய உள்துறை அமைச்சராக இருந்துகொண்டு, கட்சி தலைவராகவும் பா.ஜ.க. புதிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு நீடித்தார், அமித்ஷா. அப்போது, அமித்ஷாவுக்கு கட்சி பணிகளில் உதவுவதற்காக பா.ஜ..க.வின் செயல் தலைவராக்-கப்பட்டார், நட்டா. இப்போது பா.ஜ.க.வின் 11- வது தலைவராக நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். போட்டியில்லாமல் ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்-பட்டுள்ள நட்டாவுக்கு நிறைய சோதனைகள் காத்திருக்கின்றன. அமித்ஷா, 6 ஆண்டு களுக்கு முன்னர் பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற பின், 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர வைத்தார்.
கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வர அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தி ,மோடியை இரண்டாவது முறையாக பிரதமர் ஆக்கினார். பாரதிய ஜனதா கட்சியின் புது தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜே.பி.நட்டாவுக்கு, இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் நடக்கும் சட்டபேரவை தேர்தலில் பா.ஜ.க.வை வெற்றிபெற செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது. இது சாதாரண வேலை அல்ல. அடுத்த ஆண்டு பீகார் மாநிலத்தில் நடக்கப்போகும் சட்டப்பேரவை தேர்தலையும் நட்டா தலைமையில் தான் சந்திக்க வேண்டும். பா.ஜ.க.கூட்டணியில் இருந்து பால் தாக்கரேயின் சிவசேனா தொடங்கி ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகிறது. இதனால் மிச்சமுள்ள கூட்டணி கட்சிகளை தக்க வைப்பதோடு, புதிய கட்சிகளையும், பா.ஜ.க.கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தமும் நட்டாவுக்கு உள்ளது. இந்த சவால்களை ஜே.பி.நட்டா எப்படி எதிர்கொள்ளப் போகிறார் பார்ககலாம்.
More Stories
தமிழ் பேசு தம்பி…!
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்
இளைஞர்களை அணி திரட்டுகிறார்
பண்ருட்டி வேல்முருகன்