November 3, 2024

சம்பள உயர்வு வழங்காத பனியன் நிறுவனங்கள் குறித்து தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கலாம்

ஏ.ஐ.டி.யு.சி., பனியன் பேக்டரி லேபர் யூனியன் சார்பில் பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்த விளக்க கூட்டம் திருப்பூர் – ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நடந்தது.

துணை செயலாளர் செந்தில்குமார் தலைமைவகித்தார். பொதுச்செயலாளர் சேகர், பொருளாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். திருப்பூர் பின்னலாடை நிறுவன தொழிலாளர்களுக்கு 32 சதவீத சம்பள உயர்வு வழங்க உற்பத்தியாளர் சங்கம், – தொழிற் சங்கங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு முதல் ஆண்டில் 19 சதவீத சம்பள உயர்வு வழங்கவேண்டும். பயணப்படி ரூ. 25 ,ஒன்றரை ஷிப்ட் பணிபுரியும் தொழிலாளருக்கு டீ பேட்டா ரூ.30 வழங்கவேண்டும். சம்பள உயர்வு மற்றும் இதர பயன்களை தொழிலாளர்கள் கேட்டுப்பெறவேண்டும்.

சம்பள உயர்வு வழங்காத நிறுவனங்கள் குறித்து தொழிலாளர்கள் சங்கத்தில் தெரிவிக்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.