January 26, 2025

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்

சட்டப்பேரவையில் பொள்ளாச்சி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவாலுக்கு எடப்பாடி பழனிசாமி மவுனம் காத்திருந்தார். பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தவறான தகவலை எதிர்க்கட்சித் தலைவர் அவையில் பதிவு செய்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில் புகார் அளித்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் புகார் தந்த அடுத்த நாளே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நான் சொன்னது தவறு என்று ஆதாரம் தந்தால் நீங்கள் சொல்லும் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.