January 26, 2025

சசிகலாவின் அடுத்த திட்டம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கு செல்லும் போது அதை பார்த்து கொண்டிருக்கும் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று அதிமுகவை வழிநடத்துவதற்கு தன்னை ஆயாத்தப்படுத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது. இதற்காக விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து அணி திரட்டுவதற்கும் தன்னை தயார்படுத்தி வருகிறார். இதற்காக தமிழக அரசின் பாதுகாப்பு வேண்டி காவல்துறைக்கும், முதலமைச்சருக்கும் கோரிக்கை வைத்துள்ளாராம். ஜெயலலிதா சமாதியில் இருந்து தொடங்கும் சுற்றுப்பயணம் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்கிறார் சசிகலா.