June 20, 2024

கொரோனா வைரசின் விதை விழுந்து முளைத்த மாநிலம் கேரளா

[responsivevoice_button voice=”Tamil Male”]இந்தியாவில் முதன் முதலாய் கொரோனா வைரசின் விதை விழுந்து முளைத்த மாநிலம் கேரளா. விஷ விருட்சமாக வளர்வதற்கு முன்பே அதன் தளிர்களை அந்த மாநில அரசு, வெட்டி வீழ்த்தியதால் கொரோனா பெரிதாக கிளை பரப்பவில்லை. சரியாக நூறு நாட்களுக்கு முன், அங்கு கால் பதித்த கொரோனா, இன்றைய தேதி வரை 4 பேர்களை மட்டுமே பறித்து சென்றுள்ளது. (அதன் பிறகு கொரோனா பரவிய மராட்டிய மாநிலத்தில் இதுவரை 779 பேர் பலியாகி விட்டனர்.) இந்தியாவிலேயே கொரோனா பரவல் குறைவாக உள்ள மாநிலமும் கேரளம் தான். கொரோனா பரவலின் ஆரம்ப கட்டத்திலேயே, ’’தனிமைபடுத்துதல்’’ நடவடிக்கையை மேற்கொண்டது, அந்த மாநிலம்.

இப்போது அங்கு 20 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இருப்பினும் தொடர்ந்து கட்டுப்பாடுகளை கடைபிடித்து, மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறது, கேரளா. டெல்லியில் மொத்தமுள்ள புபு மாவட்டங்-களும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்-பட்டுள்ள சூழலில் அங்கு பெரும்பாலான மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால், கொரோனா பாதிப்பு குறைந்த அளவில் இருந்தபோதும், கேரளாவில் மதுக்கடைகள் திறக்கப்-படவில்லை. மதுக்கடைகளை திறப்பதில் அவசரம் காட்ட மாட்டேன்’’ என்று தெளிவு படுத்தியுள்ளார், முதல் அமைச்சர் பினராயி விஜயன்.

இந்த நிலையில்,கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல உயர ஆரம்பித்துள்ளது. வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு சாரை, சாரையாக வந்திறங்கும் வெளிநாட்டு வாழ் மலையாளிகளால் (நோர்க்ஸ்) இந்த சூழல் உருவாகியுள்ளது. வளை-குடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு கடந்த 7 ஆம் தேதி ஆட்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு விமானங்கள் வந்திறங்கின. இரண்டு விமானங்களில் வந்தவர்களில் ஆளுக்கொருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர், அபுதாபியில் இருந்து கொச்சி வந்து இறங்கியவர். அவர், எர்ணாகுளம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இன்னொருவர், துபாயில் இருந்து கோழிக்கோடு வந்தவர்களில் ஆளுக்கொருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர், அபுதாபியில் இருந்து கொச்சி வந்து இறங்கியவர். அவர், எர்ணாகுளம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இன்னொருவர், துபாயில் இருந்து கோழிக்கோடு வந்தவர். அவரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.

இது நான் எதிர்பார்த்தது தான். கொரோனா தொற்றுடன் இருவர் வந்திருப்பது கவலை கொள்ளச்செய்துள்ளது என்று வருத்தம் தோய்ந்த குரலில் தெரிவித்துள்ளார், பினராயி விஜயன். இன்னும் ஏராளமானோர் வெளிநாடுகளில் இருந்து, கேரளாவுக்கு வரப்போகிறார்கள். இது தவிர வெளி மாநிலங்களில் தொழிலாளர்களாக வேலை பார்த்த ஆயிரக்கணக்கானோரும், கேரளா வந்த வண்ணம் உள்ளனர். இத்தனை பேரையும் கேரளா தாங்குமா?

மாநிலத்தில் கொரோனாவை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க பினராயி விஜயன் தலைமையிலான அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? வெளிநாட்டு வாழ் மலையாளிகள், வீடுகளுக்குள் தங்களை தனிமை படுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருவோர், சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டு, நோய் தொற்று இல்லாத பட்சத்தில் 14 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். தொற்று அறிகுறி இருப்பின், கொரோனா முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்-படுவர்.

100 நாள் கொரோனாவுக்கு கேரளாவில் 4 பேர் மட்டும் இறந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் வசித்து வந்த மலையாளிகள் 104 பேர் இதுவரை உயிர் இழந்திருப்பது, அதிர்ச்சியூட்டும் கொசுறு தகவல். – பாபா