[responsivevoice_button voice=”Tamil Male”]கூடங்குளம் அணுமின்நிலய அமைப்புக்கான நடவடிக்கைகளும், ஏற்பாடுகளும் தொடங்கிய நாள் முதல் போராட்ட குழுக்கள் ஒருங்கமைப்பாளர் உதயகுமாரும் அவருடைய குழுவினரும் தீர்மானம் நிறைவேற்றி உண்ணாவிரதம் தொடங்கி பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். கூடங்குளம் அனுமின் நிலையத்தை சுற்றியுள்ள பல கிராமங்களை சார்ந்த மீனவர்கள் உள்ளிட்ட ஆயிர கணக்கில் ஆண்களும், பெண்களும் இதில் கலந்து கொண்டனர். கூடங்குளம் அனுமின் நிலையம் அமைத்ததன் விளைவாக ஏற்படக்கூடிய கேடு விளைவுகள் பற்றியும் போராட்ட காரர்களால் கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பியுள்ளனர். தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசினுடையது. மத்திய அரசின் சார்பாக அனுமின் நிலைய விஞ்ஞானிகளும், பிரதமரும், அவரது அமைச்சர்களும் தந்த விளக்கங்களை ஏற்காத நிலையில், நிலைமைகள் முற்றத் தவங்கி மாநில அரசு தலையிட நேர்ந்தது. மாநில முதல்வர் அணு உலைப் பற்றிய நியாயப்பூர்வமான சந்தேகங்களை தீர்த்து வைத்து அனுமின்நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களை சார்ந்த மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட கூடாது என்று வலியுறுத்தினார். மத்திய அரசுக்கு முதலமைச்சர் விரிவான கடிதம் எழுதினார். தமிழக சட்டமன்றமும் தன்னுடைய கருத்தினை மத்திய அரசுக்கு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
மத்திய அரசு, மாநில அரசு தெரிவித்த கருத்துகளை மனதில் கொண்டு விஞ்ஞானிகள் கொண்ட குழு ஒன்றை, அனு உலையின் பாதுகாப்பு, அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள், சேதாரங்கள் மேலும் கடலிலும், நிலத்திலும் ஏற்படக்கூடிய விளைவுகள் என எல்லாவற்றையும் பரிசீலிக்க பணித்தது. அவர்களது அறிக்கையை தொடர்ந்து மத்திய அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை ஏற்காத போராட்ட குழுவினர் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த நிலையில் ஆயிரக்கணக்கில் கூடி போராட்டம் நடத்தியவர்களின் மன உணர்வுகளை மதித்து மாநில அரசு விஞ்ஞானிகளை கொண்ட மற்றுமொரு கூடங்குளம் நிலையத்தை பற்றிய விரிவான அறிக்கையை கேட்டது அவர்களும் கூடங்குளம் அனுமின் நிலையத்தினால் பாதகமான விளைவுகள் ஏதும் ஏற்படாது என்பதை உறுதி செய்ததோடு, சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பல்வேறு நில திட்டங்களை சிபாரிசு செய்ய தெரிவித்து மாநில அரசுக்கு அறிக்கை தந்தார்கள்.
மாநில அரசு பெற்ற அறிக்கைகள் அடிப்படையில் மாவட்ட அரசு நடவடிக்கைகளை வேகப்படுத்தி அமல்படுத்தியது. இந்த நடவடிக்கைகள் செயல்படுத்துவதற்கு சில மாதங்கள் ஆயிற்று இவையெல்லாம் ஏறத்தாழ முடிவுற்ற நிலையில் அனுமின் நிலையத்தை துவக்குவதற்கான நடவடிக்கை துவங்கிய நிலையில் மீண்டும் அனுமின் நிலையத்தை மத்திய அரசு இயக்கத் துவங்கியது. மாநில அரசு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பை கொடுக்க வேண்டியது கட்டாயம்.
இந்த நிலையில் உதயகுமார் தலைமையிலான போராட்ட குழுவினர் மீண்டும் ஆயிரக்கணக்கில் கிராம மக்களை திரட்டி பெண்களையும், குழந்தைகளையும் முன்னே நிறுத்தி உண்ணாவிரதம் துவக்கினர். 144 தடை உத்தரவு விதிக்கப்பட்ட பகுதியில் வராமல் உண்ணாவிரதம் மேற்-கொண்டார்கள். போராட்டத்தை நடத்தினார்கள். காவல் துறையினர் போராட்டக்காரர்கள் எல்லை மீறாமல் இருப்பதற்கும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ̧ழையாமல் இருப்பதற்கும் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். போராட்டம் இரண்டு நாட்களை கடந்த பிறகு போராட்டம் நடத்தியவர்கள் தடைவிதிக்கப்பட்ட பகுதியில் எல்லை மீறி ̧ழைய முனைந்ததோடு அனுமின் நிலையத்தை நோக்கிச் செல்ல துவங்கினார்கள். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியபோது மீறிக்கொண்டு போராட்டக்காரர்கள் முன்னேற துவங்கிய நிலையில் போலீசார் கண்ணீர் குண்டுகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். கலைந்தோடிய போராட்டக்காரர்கள் போலீசாரை தாக்கியதோடு வாகனங்கள் வரவேண்டிய பாதைகளை பாறாங்கற்களைப்போட்டு அடைத்தனர். கூடங்குளம் பஞ்சாயத்து அலுவலகமும், வேறு சில கட்டிடங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது. அங்கிருந்த காவல் நிலையம் போராட்டகாரர்களால் தீ வைக்கப்பட்டது. இதன் விளைவாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். போராட்டக்காரர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளார் சிலர் காயமடைந்துள்ளார்கள். போலீசாரில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். அதிகாரிகளும், காவலர்களும் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவினுடைய தலைவர் கருணாநிதி அனுமின் நிலையம் வேண்டும் என்கிறாரா? அல்லது வேண்டாம் என்கிறாரா? என்று இதுவரை தெரிவிக்கவில்லை. சுற்றியுள்ள கிராம மக்களின் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகள் பற்றி பேசுகிற கருணாநிதி இன்றுவரை மாநில அரசின் நடவடிக்கையில் நடந்துள்ள முன்னேற்றத்தைப் பற்றி தெரிவிக்கவில்லை. மாறாக அரசின் உதவியோடு வன்முறை தாண்டவம் ஆடியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி நிர்வாகம் செய்த அவருக்கு போராட்டகாரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்திருப்பாரானால் அவருடைய நிர்வாக அனுபவத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். அவருடைய ஆட்சி காலத்தில் “சிம்சன் கம்பெனி” போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன் என்று கொக்கரித்தார். விவசாயிகள் போராட்டம் நடந்தபோது சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடத்திய போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு விவசாயி இறந்தார். அவருக்கு இவையெல்லாம் மறந்து போயிருக்காது. இத்தனையும் நடத்தியவர் சொல்கிறார் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. மாநிலம் முழுக்க போராட்டம் நடத்த வேண்டும் என்று.
சட்டமன்றத்தில் துணைநின்று கூடங்குளத்திற்கு தீர்மானம் போட்டவர்கள் அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் என்ன குறை என்பதை தெரிவிக்காமல் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்கிறார். உரத்த குரல் கொடுத்த-வர்கள் இவர்கள் அத்தனை பேரும் சென்னை உயர்நீதிமன்றம் சென்று அனுமின் நிலையம் செயல்பட கூடாது என்பதற்காக தொடுத்த பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பு பற்றி வாய்திறக்கவில்லை. அந்த தீர்ப்பு போராட்டகாரர்களுக்கு பொருந்துமா அல்லது பொருந்தாதா அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையா? இல்லையா? என்பதைப் பற்றி இன்றளவும் வாய் திறக்கவில்லை.
வடக்கேயிருந்து பறந்து வந்த சமூக ஆர்வலர் கேஜ்ரிவால் கூடங்குளத்திற்கு நேரில் வந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று குற்றம் சாட்டிவிட்டு பறந்து போய்விட்டார். தரையில் போராட்டம் நடத்தினார்கள். கடலில் இருந்த பாறை மீது ஏறி நின்று போராட்டம் நடத்திய ஒருவர் கடலோர பாதுகாப்பு விமானம் மேலே பறந்ததன் அதிர்ச்சியால் கீழே விழுந்து மரணமடைந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்-துள்ளது. கடலோர பாதுகாப்புக்கு பொறுப்பான மத்திய அரசு பற்றியோ, மத்திய அரசின் நடவடிக்கைப் பற்றியோ இதுவரை கருணாநிதி வாய்திறக்கவில்லை. தன்னுடைய ஆட்சி காலத்தில் அடக்குமுறையும் துப்பாக்கி சூட்டையும் தோன்றாத துணையாகக் கொண்டிருந்த கருணாநிதி இதைப்பற்றி தெளிவாக தமது கருத்தை முன்வைப்பதை விட்டுவிட்டு வெறும் ‘அரசியல் கோமாளியாக’ பேசிவருகிறார்.
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…