March 16, 2025

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாக சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிவடைந்தபின் முதல்வர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்!

உரிமை மீட்போம்! மாநில நலன் காப்போம்!

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம்-1

  • மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவதற்குக் கண்டனம்.
  • இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும்
  • உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்பட்ட சவாலான- கர்நாடக அரசின் இந்தத் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதியும் வழங்கக்கூடாது.

தீர்மானம்-2

  • இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்

தீர்மானம்-3

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்க முடிவு.

  • உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.