September 26, 2023

காரைக்காலில் பாமக பிரமுகர் படுகொலை!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் பாமக கட்சியை சேர்ந்த செயலாளர் தேவமணி என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் இந்த தகவல் காரைக்கால், நாகப்பட்டினம் பகுதிகளில் பெரும்பரபரப்பாக உள்ளது. வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் இதுவரை பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.