November 2, 2024

கர்மத்தின் பாதையில் பயணம் செய்வோம்…!!

கர்மா பொல்லாதது அதை வெல்ல யாராலும் முடியாதது. இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவர். மறைந்த பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல் பயிற்சிப் பெற்றார், ராஜீவ்காந்தி விமானியாக பயற்சிப்பெற்றார். ஆனால் ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மரணம் அடைந்தார். எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின் ஜானகியம்மாள் முதலமைச்சர் ஆனார். ஆர்.எம்.வீரப்பன் வசம் அதிகாரம் போய்விடும் என்று எண்ணிய பண்ருட்டியார் திருநாவுக்கரசு, நாவலர் நெடுஞ்செழியன் அறங்கநாயகம் போன்றவர்கள் ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை நம் கைக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று எண்ணினார்கள். பிறகு திருநாவுக்கரசு பண்ருட்டியார் நாவலர் போன்றோர் ஜெயலலிதாவால் தூக்கி எரியப்பட்டார்கள். ராமதாஸ், வைகோ, சசிகலா போன்றோர் முப்பது வருடங்களாக கனவில் இருந்தார்கள். ஆனால் ஒபிஎஸ், ஈபிஎஸ் முதல்வர் ஆகி சந்தோஷம் அடைந்தார்கள். பிரபலமாக இருக்கும் பொழுதே ராஜீவ்காந்தியும் பிரபாகரனும், தங்களின் லட்சியம் நிறைவேற்வதற்கு முன்பே மரணித்தார்கள். ஈவெ.ராமசாமி விநாயகர் சிலையை கல் என தூக்கி எறிந்தார். ஆனால் சிறுநீரகத்தில் உருவான கல்லை கூட தூக்கி எறியாமல் சுற்றி திரிந்தார். ஜெயலலிதா சிறைக்கு போகவேண்டும் என கருணாநிதியும் கருணாநிதி பவர் இல்லாமல் நான்கு சுவருக்குள் முடங்கி இருக்கனும் என்று ஜெயலலிதாவையும் நினைத்தார்கள். ஆனால் கருணாநிதி விருப்பப்படி ஜெயலலிதா சிறைக்கு சென்ற பொழுது அதை உணரும் நிலையில் கருணாநிதி இல்லை. ஜெயலலிதா விருப்பப்படி கருணாநிதி இறந்த பொழுது ஜெயலலலிதாவே உயிருடன் இல்லை. மெத்தப் படித்த மன்மோகன்சிங் சோனியாகாந்தியின் கருத்துக்கு செவி சாய்த்தார். அவர் விருப்பப்படி செயல்பட்டார். ஆனால் ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு உலகமே செவி சாய்க்கிறது. விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே அடக்க முயல்கிறார்கள். ஆனால் பூமி இன்று உலகத்தேயே முடக்கி நாளுக்கு நாள் மனிதன் வாழ்வுக்கு இருது விலகி செல்கிறது. கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவதில்லை. உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றுவதில் தவறுவதில்லை.

உங்கள் செயல்களுக்கான பணியை ஏதோ ஒரு வகையில் உங்களிடமே சேர்த்துவிடும் என்பதே கர்மா, யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கே மண்டியிட வேண்டியிருக்கும். கேடு செய்ய யாருக்கு நினைக்கின்றோமோ அதே கேடு நமக்கே வருகிறது என்பதை புரிந்துக் கொள்வோம். கொஞ்சநாள் வாழும் வாழ்க்கையில் நன்மையை மட்டுமே விதைப்போம். தீமைகளை விட்டு விலகியிருப்போம். தீயவர்களுடன் சேராமல் இருப்போம். நல்லவர்களாக வாழ்வோம் கேட்டவன் தானே தன் அழிவை தேடிக் கொள்கிறான். அவனோடு கொஞ்சம் கூட உங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். பாவ மன்னிப்பு என்ற மத சடங்கு இந்து மதத்தில் இல்லாத ஏன் தெரியுமா? பாவங்கள் மன்னிக்கப்படுமே ஆனால் பாவிகள் தைரியசாலிகள் ஆகிவிடுவர். உணந்தவன் பாக்கியசாலி, கட்டுப்பட்டவன் புத்திசாலி நீங்கள் பாக்கியசாலியா? புத்திசாலியா? உங்களுக்கான மதிப்பெண்களை நீங்கே போட்டுக் கொள்ளுங்கள். வாழ்வில் மறப்போம், மன்னிப்போம் என்ற நல்ல கொள்கையை பின்பற்றுவோம்.

நம் நிலைக்கு கீழ் உள்ளவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து மகிழ்வோம். இறைவனின் ஆசிர்வாதத்தை விட மிகப் பெரியது தர்மத்தின் வாழ்த்து.

“தர்மம் தலைகாக்கும் தமிழ்மொழி உயிர்காக்கும்“

– டெல்லிகுருஜி