September 18, 2024

ஒரு திரைப்படம் சாதியை முன்னிறுத்தி அரசியலை ஆக்கிரமிக்கிறது

“ஜெய்பீம்“ என்ற தமிழ் திரைப்படம் பல மொழிகளில் வெளியிடப்பட்டு உலகம் முழுவதும் ஒலிபரப்பாகி திரைப்பட தயாரிப்பாளருக்கு நல்ல வசூலை பெற்று தந்துள்ளது. அதே நேரம் இது சமுதாயத்திற்குள் பிளவை ஏற்படுத்தி ஒரு சமுதாயத்தின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. இதனால் தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு மாற்றத்தை தோற்றிவித்துள்ளது. குறிப்பாக பாமக கட்சிக்கு மிகப் பெரிய ஆதாயத்தையும் அரசியல் ரீதியாக இந்த திரைப்படத்தை பார்த்து பாராட்டிய தமிழக முதல்வர் தற்பொழுது திரைப்படம் குறித்த எந்த விமர்சனத்தையும் முன்வைக்க விரும்பாமல் இந்த திரைப்படம் நமது ஆட்சிக்கும் திமுக கழகத்திற்கும் ஒருவித பலவீனத்தை உருவாக்கக் கூடிய அளவிற்கு பொதுமக்களால் விமர்சிக்கப்படுகின்றது. தனியொரு மனிதன் வியாபார லாபம் அடைவதற்காக ஒரு தனி சமுதாயம் (வன்னியர்) பகையை வளர்த்துக் கொள்ள வேண்டுமா என அரசியல்வாதிகள் நினைக்க தோன்றுகிறார்கள்.

அரசியலில் ஒரு தேக்க நிலையில் இருந்த பாமக கட்சி டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் இந்த சினிமா விஷயத்தை கையில் எடுத்து சமுதாயத்திற்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்கின்ற முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சட்ட நடவடிக்கை மூலம் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகிறார்கள். தமிழ்நாட்டு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் குறிப்பிட்ட சமுதாயங்கள் ஒரு நடிகரை தூக்கிப் பிடித்துக் கொண்டு திரைப்படத்திற்கு ஆதரவான நிலைகளை மேற்கொண்டு லாபம் பார்த்த நடிகரின் பின்னால் சென்றுக் கொண்டு அநிாயத்தை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். இத்தகைய செயல் அரசியல் ரீதியாக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு எதிர்கால அரசியலில் தேர்தல் களத்தில் சாதியின் ரீதியாக பிளவை ஏற்படுத்துவதுடன் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்கின்ற அளவிற்கு பிரச்சனையாக மாறி விஸ்வரூபம் எடுக்கும்.

எங்கெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிதிராவிடர்கள், குறவர்கள், மலைவாழ் மக்கள் இதுபோன்ற வகுப்பை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்கள் திரைப்படத்தால் பாதிப்புக்குள்ளான பெரும்பான்மை சமுதாயம் இருக்கும் இடங்களை சார்ந்தே வசிக்கிறார்கள். ஆகவே திரைப்படம் இது சமுதாய மக்களிடம் மோதலை ஏற்படுத்த முயற்சித்தாலும் மோதலுக்கு காரணமாக காட்சிகளை அமைத்தாலும் உண்மைத் தன்மையை புரிந்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களோடு எந்தவிதமான மோதல் போக்கையும் வன்னியர்கள் கையில் எடுக்கமாட்டார்கள். காரணம் தங்களை நம்பி அவர்கள் வாழ்வாதாரம் இருப்பதினால் எப்பொழுதும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அதற்கு உதாரணமாகத் தான் இந்த ராஜாக்கண்ணு விஷயத்தையும் காவல்துறையின் அடக்கு முறையையும் பொது வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை தனது இளமை காலத்தை முதுமையாக்கி கொண்டு திருமணமே செய்துக் கொள்ளாமல் காவல்துறையின் எதிர்ப்புகளையும், மீறி நீதிமன்றம் வரை சென்று குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்து தனது 39ம் வயதில் கோவிந்தன் படையாட்சி திருமணம் செய்துக்கொண்டார் என்று வரலாறு. தான் சார்ந்துள்ள இயக்கம் சாதி, மதம், மொழி, இனம் இவைகளை கடந்து பொதுவுடைக்காக கொள்கையில் இருப்பதினால் இந்த குறவ இன மக்களை பெற்று தந்த நியாயத்தை விளம்பரம் படுத்திக்கொள்ள வில்லை மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சினிமா தியேட்டர்களில் திரைகளில் திரைப்படம் ஒடலாம் ஆனால் பாதிக்கப்பட்ட இதயங்களில் “ஜெய்பீம்“ திரைப்படம் அதிர்ச்சி அலையை உருவாக்கி உள்ளது.

கரையேர துடிக்கும் அலைகளைப் போல் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை சமுதாயம் தீர்வை நோக்கி நகர்ந்தால் எந்த நிலையை எட்டும் என்பதை அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் சிந்தித்துப் பார்த்து செயல்பட வேண்டியது அவசியமாகும். ஒரு திரைப்பட தயாரிப்பாளரோ, ஒரு இயக்கனரோ தவறை சுட்டிக் காட்டும் பொழுது தவறை திருத்திக்கொள்வதும் தவறுகளுக்கு பரிகாரம் தேடுவதும் இயற்கையான ஒன்றுதான். அந்த வகையில் ஜெய்பீம் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் பொதுவெளியில் மன்னிப்பு கேட்பது தவறாகாது. பிரச்சனைகளுக்கு தீர்வு காண இதுஒன்றே சிறந்த வழியாகும். இந்த திரைப்படத்தின் புகழும், பெருமையும் கோவிந்தன் படையாட்சிக்கும் அவர் சார்ந்துள்ள மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டுக்காக சாரும்.

-டெல்லிகுருஜி