எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம். தனி ஒதுக்கீடு கோரிக்கையை வென்றெடுப்போம். உள்ஒதுக்கீடு 10.5 சதவீதம் இது இடைக்கால நிவாரணம். முழு நிவாரணம் பெற ஒன்றுப்பட்டு வாக்களிப்போம். வெற்றி கனியை தட்டிப்பறிப்போம். நாம் எவருக்கும் எதிரியல்ல. நமக்குள் இருக்கும் பகையை மறந்து உறவுகள் சொந்தங்கள், ஒன்றிணைந்து வாக்களித்து நன்றி கடனை திருப்பி செலுத்துவோம். 1987 தொடர் சாலை மறியல் போராட்டத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இந்த தேர்தலில் 6.4.2021 அன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நாம் அளிக்கும் வாக்கு ஒவ்வொன்றும் அடுத்து தலைமுறை தலைமுறையாக பேசப்பட்டு வரலாற்றில் இடம் பெறும் நிகழ்வாக மாற்றிக் காட்டுவோம். முன்னேற்றம் என்பதை உறுதிப்படுத்துவோம். தனி ஒரு அமைப்பு என கருதாமல் ஒவ்வொரு அமைப்புகளின் குரலாக ஒருங்கிணைந்து ஒற்றுமையோடு குரல் கொடுப்போம்.
வாக்களிப்பது நமது கடமை! நம் எதிரிகளை அடையாளம் கண்டு வாக்களிப்பது நமது உரிமை. சாதி, மதம், மொழி, இனம் இவைகளை கடந்து தனிப்பெருன்பான்மை சமுதாயம் பேரும், புகழும் நிலைத்து நிற்க பகை மறந்து பு00 சதவீதம் கட்டாயம் வாக்களிப்போம். எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? ஏமாற்றுபவர்கள் யார்? இடஒதுக்கீடு வழங்கியது யார்? வழங்குவதாக அறிவித்தது யார்? கோரிக்கை வைத்தவர்கள் யார்? என்று தனித் தனியாக பிரித்துப் பார்க்காமல் பேதம், துவேஷம் இல்லாமல் நமக்காக வாக்களிப்போம்! நம் சமுதாய முன்னேற்றத்திற்காக வாக்களிப்போம்! நம் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக நினைத்துப் பார்த்து வாக்களிப்போம்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் விரும்புகின்றவர்களை ஆட்சி கட்டிலில் அமர வைப்போம். இந்த வாய்ப்பை தவறவிட்டால் வீண் பழி சமுதாயத்தின் மீது சுமத்தப்படும். 100 சதவீதம் வாக்களித்து நன்றி கடனுக்காக வாக்களிப்போம். வரலாற்றில் சமுதாய பெருமையை உயர்த்தி பிடிப்போம். இரண்டு கோடி வாக்காளர்கள் இருப்பதை உறுதிப்படுத்துவோம். கல்வி, வேலைவாய்ப்பில் நாம் விரும்பிய தனி ஒதுக்கீடு பெற்று சமூகம் முன்னேற்றம் அடையும் வரை அனைத்து சாதி, மத சகோதர, சகோதரிகளையும் நட்புடன் நினைத்து நமக்கு துணையாய் நட்பு பயிர் வளர்ப்போம். நாளை நமதே! நாடும் நமதே! என்று சூளுரைப்போம். நம்பிக்கை வளரட்டும்! நம் கைகள் உயரட்டும்.
6.4.2021 அன்று
விரும்பி வாக்களிப்போம்!
வெற்றியில் பங்கெடுப்போம்!!
இப்படிக்கு
வன்னியர் பாதுகாப்பு சங்கம்
மற்றும்
மறுமலர்ச்சி வன்னியர் சங்கம்
சிதம்பரம் & தலைமையகம்.
More Stories
2026 தேர்தல் – திமுக குழு ஆலோசனை
வன்னியகுல சத்ரிய நலவாரியம்
ஐ.நா. மனித உரிமை பேரவை
சுவிட்ஜர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது