சென்னை: தமிழகத்தில் முக்கிய துறைகளின் செயலாளர்களை பணியிடம் மாற்றி தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: * நகராட்சி துறை நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக கார்த்திகேயன் நியமனம். * உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் நியமனம். * மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம். * பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீட்டா ஹரிஷ் தாக்கர் நியமனம். * மின்சார வாரியத்தின் இணை ஆணையராக விஷ்ணு மகாராஜன் நியமனம். * உணவு வழங்கல் துறை இயக்குனராக அண்ணாதுரை நியமனம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
More Stories
வேளாண் பட்ஜெட் வளர்ச்சிக்கான திட்டங்கள்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு…!
தமிழ்நாடு நிதி நிலையில் திட்டமும் – நிதி ஒதுக்கீடும்…!
தமிழ் பேசு தம்பி…!