July 18, 2024

ஐக்கிய நாடு சபையில் எம். கிருஷ்ணசாமி

[responsivevoice_button voice=”Tamil Male”] திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா மேலப்பட்டு கிராமத்தில் பிறந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருங்காட்டுவூர் நடுநிலைப் பள்ளிக்கு கால்நடையாக நடந்து சென்று ஆரம்ப கல்வியும் அதனை தொடர்ந்து உயர்நிலை கல்வியை செய்யாறிலும் கற்றுத் தேர்ந்து கல்லூரிப் படிப்பை சென்னையிலும் அதன் பிறகு சட்டப்படிப்பும் சென்னையில் பயின்றவர் திரு.எம்.கிருஷ்ணசாமி. இவர் திரு.ஆறுமுக கவுண்டர் அவர்களுக்கும் திருமதி.மாணிக்கம்மாள் அவர்களுக்கும் மகனாக பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி. இவர் பழக்குவதற்கு இனிமையானவர். பிறரை உபசரிப்பதில் அன்பானவர். ஆறடி உயரம் உருவ தோற்றம் கொண்டவர். இளம் வயதில் இருந்தே காங்கிரஸ் பேரியக்கத்தின் ஈர்ப்பால் ஈர்க்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் அன்பை பெற்று திராவிட இயக்கங்களுக்கு சவாலாக விளங்கியவர்.

நண்பர்களுடன் நடைப்பயிற்சி தினசரி செல்லும் பழக்கமுடையவர். பார்ப்பதற்கு என்றும் ‘பதினாறு’ ‘மார்க்கண்டேயன்’ போல் தோற்றம் அளிப்பார். இவர் நண்பர்களுடன் உரையாடும் பொழுது நகைச்சுவை தழும்ப பேசுவார். பொதுமக்களின் குறைகளை கேட்கும் பொழுதும், அவரது குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளிடம் உரையாடும் பொழுதும் சற்று கடினமாகவும் அழகாகவும் பிரச்னைகளை எடுத்துச் செல்லும் பாங்கினை பெற்றவர்.

முன்னாள் பிரதமர் திருமதி.இந்திராகாந்தி அவரது புதல்வர் திரு.ராஜீவ்காந்தி அதன்பின் திருமதி.சோனியாகாந்தி அவரது மகன் திரு. ராகுல்காந்தி மகள் திருமதி. பிரியங்காகாந்தி ஆகியோரிடம் பழகும் வாய்ப்பைப் பெற்று காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். அனைத்து மொழிப்பேசும் தலைவர்களுடனும் நேரில் பேசும் ஆற்றலும் திறமையும் இவருக்கு உண்டு.

‘இன்னாசெய்தாரை ஒருத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்’

என்ற திருக்குறளுக்கு ஏற்ப தனக்கு எதிராக செயல்படுபவர்களும் அன்பு பாராட்டி அவர்களுக்கும் உதவி புரிவதில் சிறிதும் தயக்கம் காட்டாதவர். சில அரசியல்வாதிகள் பதவிகளுக்காக தங்கள் நிலையை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் இவரோ வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாமல் தான் சார்ந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கத்திற்கு உறுதுணையாக ஒரே களத்தில் நின்று கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டுப் வருபவர். இவர் மத்திய அமைச்சரவையில் இடபெறவேண்டும் தருணம் வந்த பொழுது அதை அடைய வேண்டும் என்று அவசரம் காட்டாமல் பொறுமை காத்தவர். இதனால் வாய்ப்பிருந்தும் அந்த வாய்ப்பு கைநழுவி போனது என்றே கூறவேண்டும்.

இவரது வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை கண்முன்னாள் கண்டவர். பலரது வளர்ச்சிக்கும் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்கும் துணை நின்றவர். மொத்தத்தில் இவர் ஒரு நட்சத்திர அஸ்த்தைப் பெற்ற தலைவர். இவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு தான் “ஐக்கிய நாடுகள்” சபையில் உரையாற்றிய நிகழ்வு. பல நண்பர்களின் வேண்டுகோளினை ஏற்று தனது ஐக்கிய நாடு சபை குறித்தும் அதில் ஆற்றிய உரைகள் குறித்தும் நூலாக வெளிவர காரணமாயிற்று திரு.எம்.கிருஷ்ணசாமி (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர் எழுதிய நூலினைப் பற்றி இனி காண்போம்.