November 3, 2024

என்று தனியும் கொரனாவின் தாக்கம்

கடந்த 6 மாதங்களாக உலகமே கொரனா பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. நோய்தொற்றின் பரவலும் அதற்கு பலியாகி கொண்டிருக்கும் மனிதர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலக மருத்துவம் இதுவரை இந்த கொடிய நோய்க்கு மருந்து இதுவரை கண்டுப்பிடித்து வெளியிடவில்லை. பரிசோதனை அளவிலேயே சென்று கொண்டிருக்கிறது. இறுதி முடிவை எட்டமுடியவில்லை. உலக மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கே இந்த கொடிய நோய் ஒரு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. கண்ணுக்கு தெரியாத பனித்துளிகளால் மனித உயிர்களை மரணப்பிடியில் சிக்கவைத்து நோயின் தாக்கம் எதுவென்று அறியாமலேயே சிகிச்சை பலனின்றி மரணத்தை தழுவுகின்ற மனிதர்கள் சகோதர, சகோதரிகள் சிறுவர்கள் வயது முதிர்ந்தவர்கள் இப்படி பலதரப்பட்ட மனித உயிர்களை அன்றாடம் பறித்துக் கொண்டிருக்கிறது.

இந்த கொடூர நிகழ்வு சுமார் 6 மாத காலமாக உலக நாட்டின் பொருளாதாரத்தையும் வீழ்ச்சியில் தள்ளிவிட்டது. இன்னும் எத்தனை மனித உயிர்களை இந்த கொரனா நோய்க்கு நாம் பலியிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக ஒவ்வொரு நாடுகளும் தங்கள் கூட்டு முயற்சியால் கொரனா நோய்க்கு விரைவில் கொள்ளி வைப்பார்கள் என்று மக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். ஆங்கில மருத்துவமும், சித்த மருத்துவமும் போட்டி போட்டுக்கொண்டு கொரனா நோய்க்கு முடிவு கட்டுவதற்கு தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்வது ஒன்று தான் தற்போதைய நிலையில் கொரனா நோய்க்கு தீர்வாக சொல்லப்படுகிறது இருந்தாலும் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை பறித்துக் கொண்ட இந்த கொரனா விரைவில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற மனிதர்களாகிய நாம் அனைவரும் கூட்டுப்பிரார்த்தனை மேற்கொள்வோம் என்று தணியும் இந்த கொரனா தாக்கம் ஆதிக்கம்.