December 6, 2024

உத்திரப்பிரதேசத்தில் இழந்த செல்வாக்கை காங்கிரஸ் பெறுமா? எதிர்கட்சிகளின் சவால்களை எதிர்த்து வெல்லுமா?

இந்தியா அதாவது பாரத் அதாவது உத்திரபிரதேசம் என்று அழைக்கப்பட்ட கேந்திரமாக திகழ்ந்தது தீர்மானிக்கும். மத்தியில் எந்தகட்சி ஆட்சியில் வரவேண்டும் என்பதை மாநிலமாக உத்திரபிரதேசம் இன்றுவரை விளங்கி வருகிறது. அந்த மாநிலத்தின் ஆதரவை வைத்து ஜவஹர்லால் நேரு முதல் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, விபிசிங் போன்றவர்கள் பிரதமர் பதவியை அலங்கரித்தார்கள். அதன் பிறகு மெல்ல மெல்ல காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளும் அணுகுமுறைகளும் அரசியல் நடவடிக்கைகளும் காங்கிரஸ் கட்சிக்கு உத்திரப்பிரதேச மாநிலம் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தனக்கு ஆதரவாக இருந்த வாக்கு வங்கியை பெரும்பாலும் இழந்த நிலையில் தற்பொழுது சொற்ப வாக்குகளை மட்டுமே நம்பி அரசியல் செய்து வருகிறது.

கடந்த கால நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இதை பு00% பிரதிப்பலிக்கிறது. தொலைக்காட்சி பெட்டிக்கு வயர்லஸ் அன்டனா பொருத்துவதைப் போல் தற்பொழுது உத்திரப்பிரதேச மாநிலம் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்காக இந்திராகாந்தியின் முகத்தை நினைவுப்படுத்துகிற பிரியங்காகாந்தியை அகில இந்திய பொதுச்செயலாளராகவும், உத்திரபிரதேச மாநில பொறுப்பாளராகவும் நியமித்திருக்கிறார்கள். இது ஒரு கவர்ச்சிக்கரமான அரசியலை முன்நிறுத்துவதாகவும் இளைஞர்களை கவரும் என்றும் குறிப்பாக பெண்கள் ஆதரவை திரட்டக் கூடியதாகவும் காங்கிரஸ் கட்சி கருதுகிறது.

ஒரு சின்ன ப்ளாஷ்பேக்…

இதற்கு முன் ராகுல்காந்தியை இப்படித் தான் அறிமுகம் செய்தார்கள் உத்திரபிரதேச மாநிலத்தவர்கள். ஆனால் அந்த மாநிலத்தில் தொடர்ந்து 60 ஆண்டுகாளமாக வெற்றிப்பெற்ற அந்த தொகுதியை கூட தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியால் முடியவில்லை. கடந்த தேர்தலில் பாமக வேட்பாளரான சுருதீராணியிடம் தோற்றுப்போனார். நல்லவேளை கேரளா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்த வயநாடு நாடாளுடமன்ற தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார் என்பது வரலாறு. இதை பிரியங்காகாந்தி அவர்களும் நினைவில் கொண்டு செயல்படுவது என்பது மிக மிக அவசியமாகும்.

உத்திரப்பிரதேச மாநிலம் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வந்த உயர் ஜாதியினர் (பிராமின்) சுமார் சு0% மக்கள் தற்போது காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி சென்று பாஜக கட்சியை ஆதரிக்க தொடங்கிவிட்டார்கள் தொடர்ந்தும் ஆதரித்தும் வருகிறார்கள். அடுத்தது சு0% உள்ள முஸ்லீம் சமுதாயமும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி சமாஜ்வாஜ் கட்சியை தொடங்கிய முலாய் சிங் யாதவ் அவர்களை ஆதரித்து வருகிறார்கள். பு5% உள்ள தாழ்த்தப்பட்ட தலித் சமுதாய மக்கள் கன்சிராம் தலைமையில் உள்ள மற்றும் மாயாவதி தலைமையில் இயங்கும் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரித்து, தொடர்ந்து ஆதரிக்க தொடங்கிவிட்டார்கள். காங்கிரசுக்கு கட்சிக்கு சவாலாகவே இருந்து வந்துள்ளது பகுஜன் சமாஜ் கட்சி.

இப்படி உத்திரப்பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை பு984க்கு பிறகு காங்கிரசின் நிரந்தர வாக்கு வங்கி மெல்ல மெல்ல கரைந்து குறைந்துப்போனது. அதனால் ராஜீவ்காந்தியின் செல்வாக்கும் சரிந்துப்போனது. காங்கிரஸ் கட்சியின் நிதி அமைச்சராக இருந்த விஸ்வநாத் பிரதாப்சிங் (விபிசிங்) காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து இந்தியா முழுவதும் உள்ள எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து போபர்ஸ் ஊழலை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு முடிவு கட்டினார் விபிசிங் என்ற சத்திரியர். மக்கள் நலனில் அக்கறை கொண்ட விபிசிங் அவர்கள் மண்டல் கமிஷனை நடைமுறைப்படுத்தியதால் தனது ஆட்சியையே இழக்க வேண்டி இருக்கும் தருவாயிலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிற்படுத்தப்பட்ட மக்கள் பலன் அடைய வேண்டும் என்பதற்காக சு7% இடஒதுக்கீட்டை அமுல்படுத்தினார்.

அரசாங்க பதவிகளை எட்டிப்பார்க்க முடியாத பல ஆண்களும், பெண்களும் அரசு அலுவலகங்களில் கோப்புகளை கையாளுகிறார் என்றால் அதற்கு வழிவகுத்து வித்திட்டவர் விபிசிங் என்ற சத்திரியர் என்பது வரலாற்று உண்மை. இந்த சாதனையை முறியடிப்பதற்கு உத்திரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமல்ல இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் ஒரு அரசியல்வாதி பிறக்கவில்லை என்று சொல்லலாம் அல்லது பிறக்கப்போவது இல்லை என்று சொல்லலாம். சமூக நீதியை நிலைநாட்டிய பெருமை விபிசிங் அவர்களையே சாரும். அது மட்டுமல்ல பல மாநில கட்சிகள் மத்திய அரசின் அதிகாரத்தில் அமர்ந்து ஆட்சிப் புரிவதற்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் வழிவகுத்தவர் விபிசிங் சத்திரியர். இந்த நிலையில் பாஜக கட்சி உத்திரப்பிரதேச மாநில ஆட்சியை கைப்பற்றி கடந்த 4 பு/சு ஆண்டுகளாக ஆட்சியை நடத்தி வருகிறது. முதல்வராக யோகி ஆதித்தனார் சத்திரியர் இருந்து வருகிறார். எதிர்வரும் தேர்தலில் முலாய்சிங், அகிலேஷ் யாதவ், மாயாவதி, காங்கிரஸ், பாஜக கட்சி விரைவில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கின்றனர். இதை மனதில் வைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை பெறுவதற்கு பிரியங்காகாந்தியை முன்னிலைப்படுத்தி மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அகிலேஷ்யாதவ், மாயாவதி கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய அளவில் வெற்றிப் பெறுவதற்கு துணையாக இருந்தது. ஆனால் அதே கூட்டணி கடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. பாஜக கட்சி அமோகமாக வெற்றிப் பெற்று ஆட்சியை தனி பெரும்பான்மையோடு அமைத்துள்ளது. ஒரு காலத்தில் மாயாவதி கட்சியை ஆதரித்து காங்கிரஸ் ஆட்சியை அமைக்காமல் பார்த்துக் கொண்ட பாஜக கட்சி பிறகு மாயாவதியையும் கவிழ்த்து விட்டு தனித்து ஆட்சி அமைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி என கடுமையாக காங்கிரசுக்கு உழைத்தாலும் கட்சியின் தலைமை பதவியை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியுமே தவிர கடந்த காலத்தில் இழந்த செல்வாக்கையும், வாக்கு வங்கியையும் திரும்ப பெறமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.

மத்தியில் பு0 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த பொழுது பல்வேறு மாநில கட்சிகள் காங்கிரஸை ஆதரித்தது. அந்த காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சியை மாநிலத்தில் பலப்படுத்தவும் தவறியதால் தோழமை கட்சிகளான மாநில கட்சிகள் தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொண்டுள்ளது. மகராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி, பீகாரில் லல்லுபிரசாத் யாதவ், ஓடிசாவில் நவீன்பட்நாயக், ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டி, தெலுங்கானா சந்திரசேகர்ராவ், கேரளாவில் கம்யூனிஸ்டுகள், தமிழகத்தில் திமுக இப்படி பல மாநில கட்சிகள் தென்மாநிலங்களிலும், வட மாவட்டங்களிலும் தங்களையும் தங்கள் கட்சிகளையும் வளர்த்துக் கொண்டார்கள். கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதே எதார்த்தநிலை. காங்கிரஸ் கட்சியை வைத்து பலன் அடைந்த தோழமை கட்சிகள் இன்றைக்கு காங்கிரஸ் கட்சியை தலைமையேற்று அதன் தலைமையில் பாஜக கட்சிக்கு எதிராக அல்லது மாற்றாக ஒன்றுப்பட்டு செயல்படுவதற்கு தயாராக இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இப்படி தனது வாக்குவங்கியை இழந்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தோழமை கட்சிகளையும் இழக்க வேண்டிய பரிதாப நிலைக்கு வந்துள்ளதை பார்க்கும் பொழுது உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவு, பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பை மட்டும் ஏற்படுத்த முடியும் என்பது உறுதி.

உத்திரப்பிரதேசத்தை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தல் முடிவு என்பது அந்த மாநில கட்சிகளான சமாஜ்வாமபார்ட்டி, பகுஜன்சமாஜ் கட்சி போன்றவைகளால் ஒற்றுமையின்மையால் மிகப் பெரிய அளவில் வாக்குகள் சிதறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மீண்டும் பாஜக கட்சியே முதல்வர் யோகி ஆதித்தனார் தலைமையில் ஆட்சியை அமைக்கும் என்பது உறுதி.

இதை காங்கிரஸ் கட்சி புரிந்துக் கொண்டு தனது செயல் திட்டங்களையும், தேர்தல் வியூகங்களையும் மாற்றி அமைத்து தோழமை கட்சிகளோடு இணைந்து சமாதான முறையில் தொகுதிகளை பங்கீடு செய்துக் கொண்டு மிகக் குறைந்த போட்டியிடுவதற்கும் ஒப்புக்கொண்டு ஒன்றுப்பட்டு தேர்தலை சந்தித்தால் ஒழிய பாஜக ஆட்சியை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை. முடிவு காங்கிரஸ் கையில் உள்ளது.

– டெல்லிகுருஜி