கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் பாமக கட்சி சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு மூலம் மேலும் பரபரப்புக்கு உள்ளாகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டப் பொழுது தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பென்னகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாமக கட்சி தலைவருமான ஜி.கே.மணி மற்றும் தருமபுரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் ஆகிய இருவரும் முதலமைச்சர் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று முதல்வரை வரவேற்று கௌரவப்படுத்தினார்கள். அதே நேரம் சேலம் மாவட்ட நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றப் பொழுது மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சேலும் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தார்கள். இவை தவிர விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி.வி.சண்முகம் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இப்படி முரண்பட்ட நிலையில் ஒரு கட்சி முக்கோண வடிவில் செயல்பட்டால் தொண்டர்கள் எக்கோணத்தில் பயணம் செய்யமுடியும் என்ற கேள்வி எழுகிறது.
ஆளுங்கட்சியை அணுசரித்து சென்று தன் இயக்கத்தையும், தன் இயக்கத்தை சார்ந்தவர்களையும் முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வது ஒரு கட்சியின் கடமையாக கருதலாம். ஆனால் முரண்பட்ட நிலையில் ஒரு கட்சியை எடுக்குமே ஆனால் அந்த கட்சி தொண்டர்கள் எந்த நிலையை எடுக்கவேண்டும் என்று குழம்பி போய் கட்சிக்கும் ஆட்சிக்கும் விலகி நின்று அரசியல் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். குறிப்பாக வன்னியர்கள் மத்தியில் சமீபகாலமாக பாமக கட்சியின் நிலைப்பாடு எந்த திசையில் பயணிக்கிறது என்பது புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்று சமுதாயத்தினர் மத்தியில் ஒரு குழப்பத்தை தோற்றுவித்து தடுமாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஏன் இத்தகைய நிலையில் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை விடை தெரியாத கேள்விகளுடனும் தூக்கம் இல்லா இரவுகளுடனும் காலத்தை கழிக்கிறார்கள். கட்சி தலைமை தான் எந்த திசையில் நாம் பயணிக்க போகிறோம் என்பதையும் நாளை எந்த திசையில் எந்த அமைப்பில் இணைந்து பயணிக்கப் போகிறோம் என்பதையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எடுத்துக் கூறவேண்டும். அப்பொழுது தான் தொண்டர்களும் தலைவர்களும் தடுமாறாமல் தடம் மாறாமல் பயணிக்க முடியும். இல்லையென்றால் சார்ந்துள்ள கட்சியின் மீது நம்பிக்கை இழந்தவர்கள் மாற்று கட்சியை தேடி செல்வதை தடுக்க இயலாது.
டெல்லிகுருஜி
More Stories
பட்டியல் இனத்தவர் உள்ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு
தமிழக தொழில் முதலீட்டுக்கு ரூ.1,258 கோடி கிடைத்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு சென்னை திரும்புகிறார்
சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை