January 21, 2025

இயற்கையை எதிர்கொள்வோம்..! எச்சரிக்கையுடன் செயல்படுவோம்!

இந்த ஆண்டு உலகில் பெரும்பாலான பகுதிகளில் கனமழையை பொழிய வைத்து நாடு நகரம் எல்லாம் வெள்ளக்காடாக மாற்றியது இயற்கை. தற்பொழுது கனடா, அமெரிக்கா, வடஐரோப்பியா நாடுகள், ரஷியா, மன்கோலியா, சீனா, ஜப்பான் நாடுகளில் மிக கன பனிபொழிவு பொழிந்து வருகிறது. 50 செ.மீ முதல் சு00 செமீ அளவிற்கு அதிகப்பட்ச பனி பொழிந்து வருகிறது. சில பகுதிகளில் பனிபுயல் வீசி வருகிறது. இதனால் ஆசிய நாடுகளில் அதிக குளிர் நிலவுகிறது. தற்போது பூமத்திய ரேகைக்கு தெற்கே அமைந்துள்ள நாடுகளில் பலத்த கனமழை பொழிந்து வெள்ள அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் பனிக்காலம் நீடிக்க உள்ளது. இதனால் மழை பொழிவு காலம் முடிவுக்கு வர உள்ளது. சென்னையை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை பொழிவு மேக கூட்டங்கள் வரும் சனிக்கிழமையுடன் நின்று விடலாம் (0பு.0பு.சு0சுசு). இன்று முதல் சனிக்கிழமை வரை மேககூட்டங்கள் சென்னை உள்பட கடற்கரை பகுதியை நோக்கி வரவுள்ளன. அதிக பனிப்பொழிவு காரணமாக மழை பொழிவு மிக குறைந்த அளவு மட்டுமே இருக்கும். திங்கட்கிழமை முதல் மேக கூட்டங்கள் பூமத்திய ரேகைக்கு தெற்கே பகுதியை நோக்கி நகர்ந்து அந்த பகுதியில் அதிக மழை பொழிய வாய்ப்பு உள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரஉள்ளது. தமிழகத்தில் இரவு நேரத்தில் அதிக பனிப்பொழிவும் பகலில் வெயிலின் தாக்கமும் காணப்படும் பிப்ரவரி முதல் கோடைக்காலத்தின் தாக்கம் தொடங்கி விடும். அதிக மழை குளிரையும் சந்தித்த நாம் அதிக வெயிலையும் சந்திக்க தயாராக இருப்போம். தற்பொழுது சென்னை மற்றும் கடலோர பகுதிகளை நோக்கி அதிக ஈரப்பதம் கொண்ட மேக கூட்டங்கள் வந்த வண்ணம் உள்ளதால் பலத்த மழை தொடர்ந்து மழை செய்ய உள்ளது. வெளியில் பயணம் செய்வதை கவனமுடன் இருக்க வேண்டும். அல்லது தவிர்க்க வேண்டும்.

– எம்.எஸ்.