மாறிவரும் வாழ்க்கை முறை, ஒழுங்கற்ற உணவு பழக்க வழக்கங்கள், உடற் பயிற்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதயநோய் தொடர்பான பிரச்சினைகள் வருகின்றன. தற்போதைய வாழ்க்கை சூழலில் உணவு உள்ளிட்ட பல விஷயங்களை மக்கள் முறையாக பின்பற்ற முடிவதில்லை. இதனால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் மிகவும் அதிகரித்து வருகிறது. மிகக்குறைந்த வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு பலர் மரணமடைவதை பார்க்க முடிகிறது. சிறுவர்களுக்கு கூட சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதய நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பிக்க உடற்பயிற்சி, முறையான உணவு பழக்க வழக்கம் உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.
கேரள மாநிலத்தில் சமீப காலமாக இதய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மாரடைப்பு உள்ளிட்ட பல இதயநோய் பாதிப்பு களுக்கு ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் கேரளாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ சிகிச்சையளிப்பதில் நாட்டில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த ஆஸ்பத்திரியில் 4 மாத காலத்தில் 40 ஆயிரம் பேர் இதய நோய்க்கு சிகிச்சை பெறறுள்ளனர் என்ற அதிரச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. ஆஞ்சியோ பிளாஸ்டி உள்ளிட்ட இதய நோய் சம்பந்தப்பட்ட சிகிச்சை அளிப்பதில் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரி முதலிடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளி விவரம் கேரள மாநிலத்தில் இதய நோய்பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் அபாயத்தை காட்டுக்கிறது. இது கேரள மாநில மக்களுக்கு பெரும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக இருந்து வருகிறது. நாளை இதய நோய் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது.
More Stories
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!
விஷச்சாராயம் குடித்ததில் 15 பேருக்கு கண் பார்வை பாதிப்பு- 62 பேருக்கு தீவிர சிகிச்சை
PRIME INDIAN HOSPITAL DR.R.KANNAN