December 6, 2024

இட ஒதுக்கீடு படும் பாடு

[responsivevoice_button voice=”Tamil Male”]இந்திய ஜனநாயக தேர்தல்களில் நடைபெற்ற ஏமாளித் தனங்களும் கோமாளித் தனங்களும் புத்திசாலித்தனமான விசித்திரங்களும் ஏராளம் என்றால் மிகையில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல்கள், மாநிலங்களவை தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவற்றை தவிர்த்து, பிற மாநிலங்களை விட உதாரணமாக தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் நடை-பெற்ற உள்ளாட்சித் தேர்தல்கள் உற்று நோக்கத்த-க்கவை. கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேற முடியும் என்ற காந்தியடிகளின் கிராமராஜ்ய கோட்பாடுகளின்படி உள்ளாட்சி முறை என்பது உறுதியளிக்கப்பட்டு முன்னாள் பாரத
இடஒதுக்கீடு படும் பாடு பிரதமர் ராஜிவ்காந்தியால் கிராம ஊராட்சி வட்டார ஊராட்சி மாவட்ட ஊராட்சி என்று மூன்றடுக்கு தேர்தல், முறை நடைமுறைக்கு கொண்டு -வரப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டை ஆண்ட, ஆளுகின்ற திராவிடக் கட்சிகளின் விருப்பு வெறுப்புகளுக்கிடையிலான தேர்தல் ஆணையத்தின் வழிக-£ட்டுதல்-களாலும் நீதி மன்றங்களின் தீர்ப்புகளாலும் உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பெறாமல் மக்கள் நலம்பெறும் திட்டங்களனைத்தும் ஒப்புக்காக நிறைவேற்றும் பொருட்டு அதிகாரங்கள் தனி அலுவலர்களின் கையிலடக்கம் செய்யப்பட்டன என்பது ஊரறிந்த உண்மை.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தியாக வேண்டும் என்கின்ற தார்மீக கடமையும் பொறுப்பும் ஆட்சி செய்கின்ற அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உண்டு என்பதை அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக சொல்கிறது. மக்கள் நலம் காக்கும் அரசு எந்தக் கட்சியாக இருந்தாலும் உரிய காலத்தில் தேர்தலை நடத்திட வேண்டும். அதுவன்றி ஆட்சியாளர்கள் தங்களின் பலத்தையோ அல்லது பலவீனத்தையோ கருத்தில் கொண்டு, தவிர்க்க முடியாத சந்தர்ப்பச் சூழல்களில் தேர்தலை தள்ளிப்போடும் சட்டத்தின் உட்கூறுகளை மட்டும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உள்ளாட்சி மன்றங்களின் தேர்தல்களை புறந்தள்ளி நிர்வாக நலனுக்காக தனி அலுவலர்கள் நிய மனங்க-ளை செய்திருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட கால அளவிற்கு ‘தனி அலுவலர்கள்’ என்னும் பொறுப்புக்கு தகுதி வாய்ந்த கல்வியாளர்களோ அல்லது இதற்கென பிரத்தியேகமான அலுவலர்களோ நியமிக்கப்பட்டிருக்கி-றார்களா? என்றால் இல்லை. ஏற்கனவே வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தேங்கியுள்ள பணிச் சுமைகளை குறைக்குமளவுக்கு போதிய அலுவலர்களின் கூடுதல் பணியிடங்கள் அனுமதிக்கப்ப-டாத நிலையிலும் அல்லது அனுமதிக்கப்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையிலும் மேலும் கூடுதலாக தனி அலுவலர்கள் என்னும் பொறுப்பு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஒப்படைக்க-ப்பட்டுள்ளது.

இதனால் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான ஒதுக்கப்பட்ட அன்றாடப் பணிகளும் பாதிக்கப்பட்டு தனி அலுவலர்கள் என்ற பொறுப்பில் நிறைவேற்றப்படும் பணிகளும் பாதிக்கப்பட்டு ஒரு ஓடத்தில் ஒரு காலையும் இன்னொரு ஓடத்தில் மற்றொரு காலையும் வைத்துக் கொண்டு பயணம் செய்ததை நாடறியும். இவ்வாறிருக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் முடங்கிக் கிடக்கும். அடிப்படை வசதிகள் மற்றும் பிற திட்டங்கள் எவ்வாறு முழுமையாக நிறைவேற்றப்பட முடியும் என்பதை “பீலி பெய் சாகாடும் அச்சிறும் “என்றும் வள்ளுவர் வாக்கு நினைவில் கொள்ளதக்கது. 2016 அக்டோபரில் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் ஏதோ இட ஒதுக்கீடுகள் பற்றி பேசியே கிட்டதட்ட 21/2 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு துணை அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு இறுதியாக டிசம்பர் 2019&ல் நடத்தப்பட்டிருக்கிறது. அண்மையில் பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல்கள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய தேர்தல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்கள் குடிபெயர்ந்தவர்கள், போலி வாக்காளர்கள் ஆகியோர் நீக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த எந்த நிமிடமும் தேர்தல் நடத்த தயார் நிலையில் இருப்பதாக மார்தட்டுகிறது என்றால் தேர்தலை சந்திக்க அரசுக்கு துணிவு இல்லையா? அல்லது எதிர்க்கட்சியினர் நீதிமன்றங்க-ளை நாடுகின்ற காரணத்தால் பெறப்படும் நீதிமன்ற தீர்ப்புகள் எவர் ஒருவருக்கும் சாதகமாக இல்லையா? என்பது கேள்வியாகிறது. ஆக, ஆளும் கட்சியினரும் அரசின் செயல்பாடுகளை முடக்குகின்ற எதிர்கட்சியினரும் தங்கள் ‘பலம்‘பற்றியும் எதிர்கால பலன் பற்றியுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் மக்கள் நலம் பற்றி எவரும் சிந்தித்திடவில்லை என்பது நிதர்சனமாகிறது. நடத்தி முடிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்களில் பட்டியலினத்தவர்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் முறையான இடஒ-துக்கீட்டுமுறை சரியாக பின்பற்றப்பட்டது. கிராம ஊராட்சி மன்றங்களை பொறுத்தமட்டில் வார்டு உறுப்பினர்களுக்கும் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கும் கட்சியில்லை என்பதும் அவர்களுக்கு கட்சி சின்னங்கள் இல்லை என்பதும் சட்டரீதியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அனைத்து வேட்பாளர்களும் கட்சியை சார்ந்தே நிறுத்தப்பட்டார்கள். இங்கு நான் இடஒதுக்கீட்டைப் பற்றி சற்று விபரமாக குறிப்பிட வேண்டியுள்ளது. உதாரணமாக மூன்றெழுத்தில் பெயருள்ள ஒரு பெண்வேட்பாளர் வேட்பு மனு அளிக்கும் போது தேர்தல் நடத்தும் அலுவலர் முன் தான் கையப்பம் செய்வதற்கு மூன்று நிமிடங்கள் எடுத்துக் கொண்டவர் என்றாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றால் நிர்வாகமும் மக்கட் சேவையும்- கேள்விக்குள்ளாகிறது. 18 வயது முழுமையாக நிரம்பிய ஒரு பெண் வேட்பாளர் ஒன்றியக் குழுத் தலைவராகவோ, மாவட்ட ஊராட்சிக்குத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது வரவேற்க கூடிய ஒன்றாக இருந்தாலும் அவரது வயதும் அறிவும் அனுபவமும் நேர்மையாக சிந்திக்கத்தக்கது. இந்த காரணங்களால் ஒருவரின் வயது, கல்வித் தகுதி, ஆளுமை தன்மை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டி தொடங்கி ஆகஸ்ட் மாதம் முடிகிறது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரருக்கு தலா 6 கோடி பரிசு வழங்கப்படும் என்று உ.பி. மாநில முதல்அமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். வெள்ளிப்பதக்கம் வெல்லும் வீரருக்கு 4 கோடி ரூபாயும், வெண்கலம் வெல்லும் வீரருக்கு ரூ.2 கோடியும் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தவிர தங்கள் மாநிலத்தில் இருந்து பங்கேற்கும் அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் யோகிஆதித்யநாத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
என்பதும், பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பதும் விவாதத்திற்குரியதல்ல. ஏனென்றால் மக்களாலும் சட்டத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் இவை பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துக்களும் அல்ல. இருந்தாலும் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரின் நிழலில் வேறொரு ஆளுமை மறைந்திருக்கிறது என்பதைத் தான் முன்னிறுத்த வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் 79 சாதிகளையும் அதன் உட்பிரிவுகளையும் கொண்ட பட்டியலினத்த-வ-ருக்கான இட ஒதுக்கீட்டு முறை என்பது ஆண்டான் அடிமை ஒடுக்குமுறை வாழ்வை படிப்-படியாக பலமிழக்க செய்து, பட்டியலினத்தாரின் கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தி அரசியலி-லும் சமூக அந்தஸ்திலும் சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்ட சட்டம-£கும். அதன்படி அரசால் அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டு அறிவிப்பு ஒவ்வொரு கிராமத்திலும், த ர் ப £ ரி லி ரு ந் து ஆ ண் ¬ ட க ¬ ள யு ம் அரசியல்வாதிகளையும் விழி பிதுங்கச் செய்தது மட்டுமல்லாமல் அவர்களின் அடிவயிற்றில் நெருப்பையும் வெறுப்பையும் அள்ளி கொட்டிவிட்டது. “சட்டம் எங்களை ஏமாற்றினால் எங்களுக்கு சட்டத்தை ஏமாற்ற தெரியாதமா? என்ற மனப்பாங்கில் கங்கணம் கட்டிக் கொண்டவர்கள் “ருசி கண்ட பூனை உரியை நோக்கித் தாவுவது போல தாவினார்கள். தகுதியான அடிமைகளை தேடினார்கள். இறுதியில் அந்தந்த கிராமங்களில் உள்ள மெஜாரிட்டி மக்களை தவிர்த்துவிட்டு அந்தக் கிராம எல்லைக்குள் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஓரிரு குடும்பங்களிலுள்ள நபர்களை மூன்றடுக்கு தேர்தல்களிலும் போட்டியிடச் செய்து வெற்றிப்பெறவும் செய்த-£ர்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஏழ்மையையும் இயலாமையையும் பயன்படுத்திக் கொள்ள ஆண்டாண்டு காலமாக ஆளுமை செய்தவர்கள் பகிரங்கமாகவே வலம் வந்து சட்டத்தை தோற்கடித்தார்கள். இடஒதுக்கீ-ட்டின் தாத்பரியத்தையும் சமூக நீதியையும் மரணிக்கச் செய்து புதைத்தார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் அறிவித்தன. மீண்டும் மீண்டும் ஆதிக்கச் சாதிகளே ஆளுமை செய்யும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. சுதந்தரத்திற்கு பின்னும் கூட ஏழை ஏழையாகவே சாகிறான். வசதி படைத்தவன் வசதிகளை படைத்துக் கொண்டே போகிறான். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எவருமே அரசியலில் தானும் வாழவில்லை. தான் சார்ந்த சமூகத்தையும் வாழ்விக்கவில்லை. கிராம ஊராட்சியின் வார்டு உறுப்பினர் பதவி முதல் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை இந்த நாட்டிலுள்ள ஓர் குக்கிராமத்தின் பட்டியலினத்தில் பிறந்த கடைசி குடிமகனாக இருந்தாலும் சரி இந்திய நாட்டின் முதல் குடிமகனாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் ஒரே விதிப்படி தான். இப்படிப்பட்ட இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு பணிக்கு சென்றவர்களில் தன்னை அடிமையாய் அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் மட்டும் ஓய்வு பெறும்வரை எவ்வித பிரச்சனைகளுமின்றி பணியை தொடர்ந்தார்கள். எதிர்த்தவர் இடையிலேயே பணிக்காலத்தை முடித்துக் கொண்டார்கள். இந்த வகையில் அலுவலக உதவியாளராக இருந்தாலும் சரி அல்லது மிகிஷி, மிறிஷி போன்ற இந்தியாவின் உயர்கல்வி அதிகாரிகளாக இருந்தாலும் சரி அவர்களுக்கு இதே விதிப்படி தான். “நெல்லுக்கு இரைத்த நீர் புல்லுக்கும் சேர்வது போல்”, மெஜாரிட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு மைனாரிட்டிகளுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மைனாரிட்டி பிரதிநிதிகள் நிழல் ஆளுமைகளு-க்கு அடிபணியாமல் மக்களுக்கு சேவை செய்வதை கருத்தில் கொண்டு பணியாற்றினால் ஏதோ இடஒதுக்கீட்டின் பயன் ஓரளவு 3 சதவீதம் நன்மையாவது மக்களுக்கு கிடைக்கும் என்பது உண்மை. பாவம் “இட ஒதுக்கீடு” படும்பாடு. சட்டத்திற்கு சரியாக இருந்தாலும் சமுதாய மேம்பாட்டிற்கு பயனளிக்கவில்லை என்பதே உண்மை.