[responsivevoice_button voice=”Tamil Male”]விஜய் நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி சு0 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படம், மின்சார கண்ணா. இந்த படத்தை கே.ஆர்.ஜி. தயாரித்திருந்தார். பின்னர் அந்த படத்தின் உரிமையை பி.எல்.தேனப்பனிடம் கொடுத்து விட்டதாக தெரிகிறது. இந்த படம் உருவான விதம் சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில் விஜயை வைத்து கே.ஆர்.ஜி.படம் தயாரிக்கும் திட்டம் ஏதும் இல்லை. ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தை தயாரிக்கவே அவர் முதலில் முடிவு செய்திருந்தார்.
ரஜினியும் ஓ.கே.சொல்லி விட்டார். கே.எஸ்.ரவிக்குமாருக்கு முன்பணமும் கொடுத்திருந்தார் கே.ஆர்.ஜி. ஆனால் டூயட் படத்தை அப்போது தயாரித்திருந்த கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருந்தது. கவிதாலயாவை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க ரஜினியிடம் கே.பாலசந்தர் கால்ஷீட் கேட்கவே, கே.ஆர்.ஜி. படத்தை ’டிராப்’ செய்து விட்டு,கவிதாலயாவுக்கு கால்ஷீட் கொடுத்தார் ரஜினி. அதன் பின்னர் தான் ஏற்கனவே முன்பனம் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமரை இயக்குநராக வைத்து, விஜய் நடிப்பில் மின்சார கண்ணாவை ஆரம்பித்தார், கே.ஆர்.ஜி. அந்த படத்தின் கதையும், ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற கொரிய படமான ‘பாராசைட்’ படத்தின் கதையும் ஒன்றே என செய்திகள் வெளியாகியுள்ளது..
இதனை தயாரிப்பாளர் தேனப்பன் உறுதி செய்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற பாராசைட் படத்தை நான் பார்த்தேன். எங்களின் மின்சார கண்ணா படத்தின் கதையை தழுவியே பாராசைட் படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே பாராசைட் பட இயக்குநர் மீது வழக்கு தொடரப்போகிறேன்’’ என்று சில தினங்களுக்கு முன்னர் அவர் தெரிவித்திருந்தார்.
இப்போது வழக்கு தொடர தயாராகி விட்டார். இதன் முதல் கட்டமாக, ’’எங்கள் மின்சார கண்ணா படத்தை காப்பி அடித்து ஏன் படம் எடுத்தீர்கள்?’ என்று விளக்கம் கேட்டு பாராசைட் இயக்குநர் பாங் ஜோன் ஹோவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார் தேனப்பன். வழக்கறிஞர் ஈஸ்வர் குப்புசாமி என்பவர் மூலம் பாங் ஜோனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மின்சார கண்ணா படத்தின் கதை, படம் வெளியான தேதி போன்ற விவரங்களை குறிப்பிட்டுள்ளார், தேனப்பன். கடிதத்துக்கு கொரிய இயக்குநர் உரிய பதில் அளிக்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளார், தேனப்பன்.
More Stories
சூர்யாவின் கங்குவா திரைப்பட விமர்சனம்
லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை
அயலான் டீசர் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்… ஏலியன்ஸுடன் சிவகார்த்திகேயன் கொடுத்த அப்டேட்