சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இடம் பெறாத ஒரு நடைமுறை எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைப்பெற போகிறது. அது தான் விவசாயத்திற்கேன்ற போடப்படும் தனிபட்ஜெட் (நிதிநிலை திட்ட அறிக்கை) நடைபெறப் போகிறது. இந்த தனி அறிக்கையை சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக இருக்கின்ற எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முதல்முறையாக தாக்கல் செய்கிறார். இது வரலாற்று நிகழ்வாகும். இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ள திமுக தேர்தல் அறிக்கையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துதலுக்கும் உரியவர்கள். பல பெரும் தலைவர்களுக்கு கிடைக்காத அரிய வாய்ப்பு உரிய முறையில் கிடைக்கப்பெற்றிருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒரு அதிர்ஷ்டசாலியே. விவசாயம் பற்றி முழுமையாக அறிந்தவரும் உண்மையான விவசாயிக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது பாராட்டுக்குரியது. தமிழக விவசாயிகள் கொடுத்து வைத்தவர்கள். பல நல்ல வளர்ச்சி திட்டங்களை இந்த அறிவிப்பின் மூலம் தெரிந்துக் கொண்டு பலன் பெறலாம்.
& டெல்லிகுருஜி
More Stories
தமிழ் பேசு தம்பி…!
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்
இளைஞர்களை அணி திரட்டுகிறார்
பண்ருட்டி வேல்முருகன்