September 18, 2024

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் உரக்க பேசும் உலகம்!

ஜோ பிடன் அதிபர் ஆவாரா? டிரம்ப் தோல்வியை தழுவாரா என்ற கேள்வி உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் எதிரொலித்து வருகிறது. மேலும் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் வெற்றிப்பெற்றால் இந்தியாவுக்கு நல்லதா அல்லது ஜோ பிடன் வெற்றிப்பெற்றால் இந்தியாவிற்கு நன்மை நடைபெறுமா? என்ற ஆலோசனை அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இதயத்திலும், இந்தியா முழுவதும் உள்ள இந்தியர்கள் மனதிலும் எழுகின்ற கேள்வியாகும். தற்போதைய கருத்துக் கணிப்புபடி அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜோ பிடன் முன்னணியில் இருப்பதாகவும் தற்போதைய அதிபர் பின்தங்கி இருப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இந்த நிலையில் சி.என்.என். தொலைக்காட்சி அமெரிக்காவில் நடத்திய சர்வேயில் மெக்சிகன், மற்றும் விஸ்கான்சின் போன்ற முக்கிய மாநிலங்களில் ஜோ பிடனுக்கு ஆதரவு பெருகியிருப்பது தெரியவந்தது என்றும் கடந்த முறை குடியரசு கட்சி வெற்றிப்பெற்ற இரு மாகாணங்களிலும் இந்த முறை ஜனநாயக கட்சியின் கொடி ம் அறிய முடிந்துள்ளது என்றும் சி.என்.என். தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு தெளிவாக தெரிவித்துள்ளது. டிரம்ப் நடத்திய கொரனா தோற்றும் 700 பலியாகியும் இருப்பதும், வடக்கு கரலோனினா மற்றும் அரிஜோனா உள்ளிட்ட மகாணங்களில் ஜனநாயக கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் மிக கடுமையான போட்டி நிலவி வருகிறது.

மேலே உள்ள இரு மாகாணங்களிலும் இரண்டு கட்சிகளும் சம பலத்துடன் இருப்பதால் மிக துல்லியமான கணிப்பை கணக்கிட முடியவில்லை என்றும் கடந்த தேர்தலில் இந்த இரு மாகாணங்களிலும் ட்ரம்ப் வெற்றிப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை அந்த இரு மாகாணங்களிலும் அதிபர் ட்ரம்ப் அவர்களுக்கு ஆதரவு குறைந்து இருப்பது அறிய முடிகிறது. அரிஜோனா மாகாணத்தில் ஜோ பிடருக்கு 50% ஆதரவும் தற்போதைய அதிபர் ட்ரம்ப் 46% ஆதரவும் இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவருகிறது. அதே போல் விஸ்க்கான்சிலை பொறுத்தவரை ஜோ பிடனுக்கு 52% ஆதரவும், ட்ரம்புக்கு 44% ஆதரவும் மட்டும் இருப்பதாகவும் சி.என்.என். கூறியுள்ளது.

இந்த ஏற்ற தாழ்வுக்கு காரணம் கொரனா நோய் தொற்று காரணத்தில் ட்ரம்ப் அவர்கள் நடவடிக்கையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியும், பொருளாதார நிலையுமே காரணமாக தெரியவந்துள்ளது. இதனால் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோபிடன் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய பிரதமர் மோடியின் ஆதரவு தற்போதைய அதிபர் ட்ரம்ப் அவருக்கு இருப்பதாக பிரதமர் மோடி அவர்களே தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தில் தெரிவித்துவிட்டார். இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்க தேர்தலில் வாக்களிக்க இருப்பதினால் அமெரிக்க தேர்தல் முடிவு என்பது பிரதமர் மோடி அவர்களுக்கும் எதிரொலிக்கும். அதனால் இந்தியாவில் மோடியின் செல்வாக்கு குறைந்துள்ளதா அல்லது வளர்ந்து வருகிறதா என்ற கேள்விக்கு அமெரிக்க தேர்தல் மூலம் நாம் தெரிந்துக் கொள்ளலாம்.

18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 275 மில்லியனுக்கு அதிகமான மக்கள் அமெரிக்காவில் உள்ளனர். கிட்டதட்ட 240 மில்லியன் குடிமக்கள் ஒட்டுப்போட தகுதி பெற்றுள்ளனர். ஆகவே இந்த மொத்த வாக்காளர்களில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு என்பது மிக முக்கியமான பங்கை வகிப்பது மில்லை. முன்னாள் அதிபர் பராக் ஓபாமா அவர்களின் பிரச்சாரமும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண் வேட்பாளர் துணை அதிபரான வேட்பாளராகவும் போட்டியிடுவது இந்திய வாக்குகளை கவர்வதற்கும் கருப்பினர்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கும் மிக அதிகளவில் பயன்தரும் என்று குறிப்பிடலாம்.

அதே போல் தற்போதைய அதிபர் ட்ரம்ப் இந்தியர்களின் அதிக வாக்குகளை கவர்வதற்கு மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை பயன்படுத்தியுள்ளார். மோடியோ அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய சுற்றுப்பயணத்தை பயன்படுத்தியுள்ளார். இந்திய சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்க அதிபரை மகிழ்வித்துள்ளார். ஆகவே இந்தியர்களின் அதிக வாக்குகளை கவரலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் கணக்கு போட்டு வருகிறார். இன்று நடக்கும் அமெரிக்க தேர்தல் மூலம் வாக்கு பதிவுகள் குடியரசு கட்சியா, ஜனநாயக கட்சியா வெற்றி யாருக்கு என்ற முன்னோட்டத்தில் அமெரிக்க தேர்தல் முடிவு என்பது தற்போதைய அதிபருக்கு பின்னடைவையும் அவர் எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் அவருக்கு ஆதரவாக இருக்கும் என கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவருகிறது. ஆட்சி மாற்றமா? காட்சி மாற்றமா? காத்திருப்போம்! அமெரிக்க தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தால் வரவேற்போம்.

– டெல்லி குருஜி