December 3, 2024

அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்துள்ள கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து அமித்ஷாவிடம் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைத்த நிலையில், அமித்ஷாவுடனான கவர்னரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல், முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகளின் விசாரணை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அமித்ஷாவுடன் கவர்னர் ஆலோசனை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.