April 13, 2024

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறது!

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு கேள்வி&பதில் நிகழ்ச்சியில் வீடியோ உரையாடல் மூலம் பேட்டி அளித்த டாக்டர் ராமதாஸ் நெறியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்பொ-ழுது ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு டாக்டர் ராமதாஸ் அவர்களின் பதில் “2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக அதிமுக இரு கட்சிகளுடனும் எந்தவிதமான தொடர்பும் கூட்டணியும் இருக்காது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்”. இடைமறித்து மற்றொரு கேள்வியை தனியார் தொலைக்காட்சி நெறியாளர் எழுப்பியபோது உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் இரண்டிலும் கூட்டணி எப்படி என்பது கேட்கும் பொழுது எங்களுடைய கட்சியின் இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை கலந்து ஆலோசித்து தான் கூறமுடியும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

திமுக ஆட்சியை வெகுவாக பாராட்டி பேசிய டாக்டர் ராமதாஸ் மத்தியில் ஆட்சியில் உள்ள நரேந்திரமோடி அவர்களையும் பாராட்ட தவறவில்லை. ஆனால் தற்போதைய நிலையில் அதிமுக கூட்டணியில் தொடரும் பாட்டாளி மக்கள் கட்சி எதிர்கால அரசியலில் திமுக அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறாது என்பதை உறுதியாக கூறி உள்ளதால் பாமகவின் இரட்டை நிலையின் முடிவையும் வன்னியர்களும், வன்னியர் சங்கம் நடத்துபவர்களும் ரசிக்கவும் இல்லை ஏற்றுக்கொள்ளவும் இல்லை என்கிறார்கள். அதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்த கேள்விக்கு நாங்கள் இருவரும் நன்றாக தான் பேசிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் எந்தவிதமான இடைபாறும் இல்லை. உதாரணத்திற்கு அம்பேத்கர் விருது வழங்கிய திருமாவளவன் என்னைப் பற்றி அரைமணி நேரத்திற்கு மேலாக பாராட்டி பேசினார் என்று திருமாவளவனை புகழ்ந்து உள்ளார். ஆனால் வன்னியர்களும் விடுதலை சிறுத்தைகளும் அரசியலில் ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு முயற்சிக்கும் போதெல்லாம் அதை தடுத்து நிறுத்தி விடுவதற்கு சில சக்திகள் முயற்சி செய்கின்றன. அது தனி நபர்களாகவும் இருக்கலாம். சில அரசியல் கட்சிகளாகவும் இருக்கலாம் என்றார் டாக்டர் ராமதாஸ். ஊடகவியலாளர்கள் நீங்கள் ஒரு விவாதத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் நானும் திருமாவளனும் கலந்துக் கொண்டு விவாதம் நடத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

ஏன் டாக்டர் ராமதாஸ் அதிமுக திமுக மீது இவ்வளவு வெறுப்புணர்ச்சியோடு தனது கருத்தை வெளிப்படுத்துகிறார் என்பது தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களை அரசியலில் உயர்த்தி பிடிப்பதற்காகத் தான் இதுபோன்று அவர் பேசி வருகிறார். அதே நேரத்தில் ஆட்சிக்கு வந்து 100 நாளில் உள்ள திமுக ஆட்சியை இழந்து 100 நாட்களை கடந்த அதிமுக கழகம் இரண்டும் வன்னியர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று சிறிதும் யோசிக்காமல் இப்படி தனது கருத்தை டாக்டர் ராமதாஸ் கூறுவது வன்னியர் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பெருமளவில் பாதகத்தை -ஏற்படுத்தக் கூடிய செயலாகும்.

வன்னியர்கள் ஆளுங்கட்சியை அணுகி ஏதேனும் உதவிக்கு சென்றால் உங்கள் கட்சி நிறுவனர் ஐயா டாக்டர் ராமதாஸ் எங்களோடு கூட்டணி வேண்டாம் என்கிறார். ஆகவே உங்களுக்கு நான் ஏன் உதவ வேண்டும் என்று கேட்பார்கள். அதே போன்றோதொரு ஒரு நிலை அதிமுகவினர் மத்தியிலும் எழத் தான் செய்யும். ஆக தமிழகத்தில் இரண்டு கட்சிகளை தவிர வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாது என்ற நிலையில் இருப்பதால் எல்லா வகையிலும் தமிழ்நாட்டின் மிகப் பெரும்பான்மையான உள்ள சமுதாயத்திற்கு பல வழிகளிலும் தோல்வியும், இழப்பும் ஏற்படும் என்பதை புரிந்துக் கொள்ளாமல் இப்படியெல்லாம் டாக்டர் ராமதாஸ் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் வன்னிய சமுதாயம் எந்த அரசியல் கட்சியிலும் சந்தேக கண்ணோட்டத்தோடு பார்ப்பார்களே தவிர நம்பிக்கைக்குரியவர்களாக இரு கட்சிகளும் பார்ப்பது கடினம். ஆகவே யாரைத் தான் நம்புவது என்று தெரியாமல் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஏதோ ஒரு இயக்கத்திற்கு வாக்களித்து விட்டு எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். கடந்த காலங்களிலம் பாமக அதிமுக திமுக இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து இரண்டு கட்சிகளும் ஆட்சி அமைத்த உடனேயே அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ். அதே பாணியில் தற்பொழுதும் அவர் தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருப்பது கூட்டணி கட்சியான அதிமுகவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் எந்த நேரமும் கூட்டணியில் இருந்து பாமக கட்சி விலகி விடும் சூழ்நிலையில் பயணிக்கிறது என்பதை உணரமுடிகிறது. பாவம் வன்னியர்கள்?!..

-டெல்லிகுருஜி