துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கை கடைப்பிடிக்காமல் தனது ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தை தேனி மாவட்டத்தில் நடத்தி முடித்திருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் தனது ஆதரவாளர்களுக்கு சீட்டு வாங்கினால் தான் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட முடியும். ஆகவே நீங்கள் ஒற்றுமையாக இருந்து நம் ஆதரவாளர்களை வெற்றிப்பெற செய்யவேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். இது மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனக்கு ஆதரவு திரட்டுவதற்கும் திட்டமிட்டுள்ள ஒ.பன்னீர்செல்வம் கட்சியை தனது கைக்கு கொண்டு வரவேண்டும் என்று ஆதரவு திரட்டுவதற்கும் முயற்சித்து வருகிறாராம்.
இதனால் அதிமுக பெரும் சலசலப்பு ஏற்பட்டு கட்சி இரண்டாக உடையும் அபாயம் தோன்றலாம் என்கிறார்கள். அவசியம் பார்வையாளர்கள்.
More Stories
தமிழ் பேசு தம்பி…!
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்
இளைஞர்களை அணி திரட்டுகிறார்
பண்ருட்டி வேல்முருகன்