ஒன்றுபட்ட அதிமுகவில் முன்னணி தலைவர்களாக இருந்த பலர் தற்பொழுது கட்சிக்குள் இல்லை. சிலர் மறைந்து விட்டார்கள். பலர் ஒதுங்கிவிட்டார்கள். இருந்தாலும் பு97சு&ல் தொடங்கப்பட்ட அதிமுக கழகம் கட்சி தொடங்கிய 5 ஆண்டுகளிலேயே (பு977) திமுகவிடம் தமிழக ஆட்சியை கைப்பற்றியது. பிறகு பு3 ஆண்டுகள் எம்.ஜி.ஆர் தொடர் வெற்றி மூலம் தமிழக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார். அதன் பிறகு அதிமுக கழகத்தில் உள்ள சில முக்கிய தலைவர்கள் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் ஜானகி அணி என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஜெயலலிதா அணி என்றும் இரு அணிகளாக பிளவுப்பட்டது. ஜானகி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அந்த ஆட்சி சு7 நாட்களில் கவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் திமுக கழகம் ஆட்சியை கைப்பற்றியது. இடைப்பட்ட காலங்களில் ஜானகி அணி ஜெயலலிதா அணி இரண்டு ஒன்றிணைந்தது. பண்ருட்டி ராமச்சந்திரன் அப்பொழுது அதிமுகவில் இல்லை. அதே போல் அதிமுகவுக்கு எதிரான ஒரு நிலையில் நாவலர் நெடுஞ்செழியன், அறங்கநாயகம், எஸ்.டி.சோமசுந்தரம், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்பட பல அமைச்சர்கள் பல மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராகவும், திமுகவை எதிர்த்தும் அரசியல் களத்தில் நின்றார்கள். கால நேரம் சந்தர்ப்ப சூழ்நிலை அதிமுகவை விட்டு வெளியேறிய அனைத்து தலைவர்களும் ஏதோ ஒரு காரணத்தை கூறி ஜெயலலிதா தலைமையில் மீண்டும் இணைந்து விட்டார்கள்.
ஆனால் எம்.ஜி.ஆரை வழிநடத்திய முக்கியமானவர்களில் ஒருவரும், எம்.ஜி.ஆரின் நெருங்கிய ஆலோசகராகவும் இருந்தவரும், பு3 ஆண்டுகள் எம்.ஜி.ஆரின் ஆட்சியை உடனிருந்து வழிநடத்தியவருமான நிழல் முதல்வராகவும் செயல்பட்ட அதிகாரபூர்வமான நபர் என்று அதிகார வர்க்கத்தால் பாராட்டப் பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் அதிமுகவை விட்டு விலகியிருந்தார்.
எத்தனையோ முறை அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழைப்பு வந்தும் பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவர் அதிமுக அணியில் தன்னை இணைத்துக் கொள்வதற்கு விரும்பவில்லை. இந்த நிலையில் பு99பு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பாமக கட்சி ஆதரவுடன் யானை சின்னத்தில் வெற்றிப்பெற்று பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக யானை மீது ஏறி சட்டமன்றத்திற்கு சென்றார். பாமகவில் இருந்த பொழுதும் வென்றார். அதன் பிறகு கேப்டன் விஜயகாந்த் அணியில் இணைந்து தேமுதிக கட்சி தமிழக சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்து பெரும் அளவிற்கு வெற்றிப் பெற வைத்து வெற்றிப்பெற்றார்.
அதன் பிறகு அதிமுகவை விட்டு விலகி பல ஆண்டுகள் கழிந்த பிறகு மீண்டும் அதிமுக கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றிப்பெற்று ஆட்சி அமைப்பதற்கு ஆலோசனை வழங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன் மீண்டும் ஆலந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார் ஆனால் அவரது அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு பண்ருட்டியாருக்கு கிடைக்கவில்லை. ஆலந்தூர் தொகுதியில் எதிர்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார். அதே நேரம் அவர் ஜெயலலிதாவின் பக்கம் இருந்த பொழுது வெற்றி ஜெயலலிதாவுக்கே கிடைத்தது. இப்படி தான் சார்ந்து இருக்கும் அணிக்கும், கட்சிக்கும் பல வெற்றிகளை தேடி தந்த பண்ருட்டியார் கடந்த சட்டமன்ற தேர்தலிலை எப்படி எதிர்கொள்வது என்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று தனது கருத்தினை நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்தார்.
ஆனால் அப்பொழுது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி போன்றோர் பண்ருட்டியாரின் கருத்தையும், ஆலோசனையும் விமர்சித்தார்கள். அதோடு தேர்தலில் போட்டியிட்டும் வாய்ப்பை மறுத்துவிட்டார் பண்ருட்டியார். இவரது ஆலோசனையை கேட்காமல் கட்சியும் பதவியும் தங்கள் கையில் இருக்கின்றது என்கின்ற காரணத்தால் தேர்தலை சந்தித்தார். அதிமுக ஆட்சியை திமுகவிடம் பறிகொடுத்துள்ளது. இந்த நிலையில் அதிமுக பொன்விழா கொண்டாடப்படுகிறது, அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது புகாரின் அடிப்படையில் வழக்குகள் பதிவுசெய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி வருகிறார்கள். இத்தகைய நிலையில் எதிர்த்து அரசியல் ரீதியாக கட்சியையும், பாதிப்புக்கு உள்ளான முன்னாள் அமைச்சர்களையும், எப்படி பாதுகாப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் சசிகலாவின் எதிர்ப்பை எப்படி சமாளிப்பது என்றும் காவல்துறையினர் ஊழல் புகார் குற்றச்சாட்டில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்வதற்கும் எத்தகைய அரசியல் பார்வையில் பின்பற்றுவது என்று தெரியாமல் ஆளுங்கட்சியை எதிர்த்து அரசியல் செய்வதிலும் தேக்க நிலையிலேயே இருந்து வருகிறார்கள்.
அரசியலில் அனுபவம் பெற்ற எம்.ஜி.ஆருக்கு ஆலோசகராக இருந்த அதிமுக காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கி பல தேர்தல்களை சந்திப்பதற்கு காரணமாக இருந்த எந்த ஊழல் வழக்குகளிலும் குற்றம் சுமத்த முடியாத ஒரு அப்பழுக்கற்ற அரசியல் சாணக்கியராக விளங்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனையை கேட்டு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் அதிமுக கழகத்தை எழுச்சிப் பெறும் பாதைக்கு அழைத்துச் சென்று மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகளில் ஒ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஏன் ஈடுபட கூடாது என்று அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் தங்கள் கருத்தினை ஊடகம், பத்திரிகை நண்பர்களிடம் வெளிப்படுத்துகிறார்கள்.
தற்பொழுது உள்ள நிலை நீடித்தால் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் ஆளுங்கட்சியான திமுகவை மட்டுமே பலப்படுத்தும். நூறாண்டு காலம் கட்சி இருந்தாலும் ஆட்சி இருக்காது என்பதை உணர வேண்டும்.
-டெல்லிகுருஜி
More Stories
2026 தேர்தல் – திமுக குழு ஆலோசனை
வன்னியகுல சத்ரிய நலவாரியம்
ஐ.நா. மனித உரிமை பேரவை
சுவிட்ஜர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது