February 19, 2025

அஜித் பிறந்தநாளில் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு விடாமுயற்சி என்று படக்குழு தலைப்பிட்டுள்ளது.

இதனை படத்தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். அஜித் குமார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.