December 6, 2024

6 நாட்களுக்கு பிறகு சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்குக் கப்பல் வெற்றிகரமாக மீட்பு : உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு

எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நின்ற எவர் கிரீன் சரக்குக் கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. சரக்கு போக்குவரத்து கடல்வழிப் பாதையில் உலகின் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் எகிப்தின் சூயஸ் கால்வாயில் கடந்த 23ம் தேதி ஜப்பான் நாட்டை சேர்ந்த ராட்சத சரக்கு கப்பல் தரை தட்டி நின்றது. இதனால், கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது.

இந்த கப்பலை மீட்க, 7வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் நடந்தன. ஏற்கனவே, கப்பல் தரை தட்டிய இடத்தில் இருந்து 20 ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டது. 14 இழுவை கப்பல்கள் கொண்டு கப்பலை நகர்த்தும் முயற்சிகள் நடந்தன. இப்பணிகளின் மூலமாக கப்பல் 30 டிகிரி கோணத்தில் லேசாக நகர்ந்தது. கப்பலை மீட்கும் பணிக்காக நேற்று மேலும் 2 பிரமாண்ட இழுவை படகுகள் சூயஸ் நோக்கி வரவழைக்கப்பட்டு, கப்பலை இழுக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் சற்று முன் எவர் கிரீன் கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல் வந்த நிலையில், எவர் கிரீன் சரக்குக் கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக மீட்புக் குழு தெரிவித்தது. இந்த நிலையில், சூயஸ் கால்வாயில் தரை தட்டிய சரக்கு கப்பல் மிதக்கவில்லை என கப்பல் உரிமையாளர் தகவல் அளித்துள்ளார். கப்பல் திரும்பியுள்ளதே தவிர மிதக்கவில்லை என்றும் கப்பல் உரிமையாளர்.கூறியுள்ளார்

கப்பலில் 25 இந்திய ஊழியர்கள்
சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள ‘எவர் கிவன்’ கப்பல், ஜப்பானை சேர்ந்த ஷோய் கிசென் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த கப்பலில் உள்ள சு5 பணியாளர்களும் இந்தியர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும், எகிப்து நாட்டை சேர்ந்த 2 மாலுமிகளும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கப்பல் நிர்வாகம் கூறியுள்ளது.