December 7, 2024

5 மாநில தேர்வு முடிவும் அதிர்ச்சியும், ஆச்சரியமும்! பாஜகவின் அணுகுமுறையும் மம்தாவின் அச்சமும்

தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்காளம், பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் 3 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மற்ற மாநிலங்களுக்கு பல கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது. ஆனால் மேற்கு வங்காளத்தில் மட்டும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று சு9ம் தேதியுடன் முடிவுற்றது. இந்தியா முழுவதும் கொரனா பரவல் அதிகரித்து உள்ள நிலையில் 3 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தை கேட்ட பொழுது அதற்கு ஆணையம் மறுத்து தெரிவித்து விட்டது. மேலும் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கை தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி முறை தன்னாட்சி அமைப்பு பெற்ற அமைப்பான மத்திய தேர்தல் ஆணையம், மாநிலத்திற்கு மானியம் மாறுப்பட்ட முடிவினை எடுப்பது ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையை நிராகரிப்பது என்பது ஏற்க கூடியது தானா என்ற கேள்வி எழுகிறது. பொதுவாக அங்கரிக்கப்பட்ட கட்சிகளின் கேட்டறிந்து மாநில சூழ்நிலைகளுக்கேற்ப விழாக்காலங்கள், மத வழிப்பாட்டு நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரிகள், செயல்பாடுகள் இவைகளையெல்லாம் நன்கு ஆராய்ந்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப பொதுவான ஒரு முடிவினை தேர்தல் ஆணையம் மேற்கொள்வது என்பது கடந்த கால நிகழ்வாக இருந்து வந்தது.

ஆனால் இந்த நடைமுறை என்பது மேற்கு வங்காளத்தில் மீறப்பட்டுள்ளதோ (கொரனா காலத்தில்) என்ற கேள்வி எழுகிறது. இதுமட்டுமல்ல ஒரு மாநில முதல்வர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நடக்க இயலாத நிலையிலும் தேர்தல் பிரச்சாரம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை என்பதை பார்க்கும் பொழுது மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் அதிகப்பட்சமாக மீறி நடந்துக் கொள்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீதிமன்றங்களும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு தேர்தல் ஆணையத்திற்கு கண்டனத்தை தெரிவித்திருப்பதுடன் கொரனா விதிகளை ஒழுங்காக கடைப்பிடிக்காவிட்டால் வாக்கு எண்ணும் தேதியை தள்ளி வைப்பது என்று எச்சரித்துள்ளது. ஆனால் மத்திய அரசோ, தேர்தல் ஆணையமோ எதைப் பற்றியும் யோசிக்காமல் மேற்கு வங்காளம், அஸ்ஸாம் இரு மாநிலங்களிலும் தேர்தல் நடைமுறையில் சில உத்திகளை கையாண்டு உள்ளது.

பிரதமர் மோடி அவர்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் மாநில கட்சிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆட்சி அதிகாரத்தால் தாங்கள் விரும்பும் கூட்டணியை அமைத்து எப்படியும் வெற்றிப் பெற வேண்டும் என்று திட்டமிட்டு செயல் ஆற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மாநில கூட்டணி கட்சி தலைவர்களிடத்தில் இருந்து எழுகிறது. உதாரணத்திற்கு தமிழ்நாடு புதுச்சேரி, இரு மாநிலங்களிலும் பாஜக கட்சிக்கு கூட்டணி அமைத்திருப்பது இரண்டு மாநில மக்களும் விரும்பாத கூட்டணியாகவும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் விரும்பிய கூட்டணியாகவும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக கட்சி அதிமுக கூட்டணி மாபெரும் சரிவை சந்தித்து தோல்விக்கான வழியை ஏற்படுத்திவிட்டது என்பது வாக்காளர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

புதுச்சேரியை பொறுத்தவரை என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான பாஜக கூட்டணி சில இடங்களில் தோற்றாலும் கந்தசாமி தலைமையில் ஆட்சி அமைகின்ற அளவிற்கு போதுமான வெற்றியை ஈட்ட முடியும். குறிப்பாக என்.ஆர்.காங்கிரஸ் பு0 முதல் புசு இடங்கள் வரையும் மேலும் ஒருசில இடங்களிலும் வெற்றிப்பெறும் வாய்ப்புள்ளது. பாஜக கட்சியை பொறுத்தவரை 4 முதல் 5 இடங்களில் வெற்றிப்பெற கூடிய வாய்ப்பு அமைந்துள்ளது. எனவே பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியில் ஆட்சியை அமைப்பது உறுதியாகி உள்ளது.

அதே நேரம் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் ஏற்பட்டுள்ள கூட்டணி என்பது ஆட்சியை இழப்பதோடு மிக குறைந்த அளவில் மட்டுமே தொகுதிகளை வெற்றிப் பெற முடியும் என்றும் குறிப்பாக தோழமை கட்சிகள் போட்டியிட்ட ஒரு சில இடங்களை தவிர ஏனைய அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படும் என்பதும் உறுதியாக தெரிகிறது.

திமுக ஆட்சி அமைவதற்கான போதுமான அளவிற்கு வெற்றிப்பெறுவதும் உறுதியாக தெளிவாக தெரிகிறது.
தனித்து ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கையை தாண்டி தோழமை கட்சிகளின் வெற்றியையும் சேர்த்து பு50 முதல் பு80 தொகுதிகள் வரை திமுக கூட்டணி கைப்பற்றி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆட்சியை இழக்கும் அதிமுக 40 இடம் முதல் 60 இடங்களுக்கு குறைவாகவே வெற்றிப்பெற முடியும் என்பது வாக்குப் பதிவிற்கு பின் உள்ள நிலவரம் தெளிவாக உள்ளது. வழக்கமாக அதிமுக அணிக்கு வாக்களிக்கும் பெண் வாக்காளர்கள் இந்த முறை திமுக கூட்டணிக்கு கூடுதலாக வாக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள் காரணம் மாவட்டந்தோறும் மு.க.ஸ்டாலின் நடத்திய மக்கள் கிராம சபை கூட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான பெண்களை அழைத்து மாநாடு போல் ஏற்பாடு செய்து தமது பிரச்சாரத்தின் மூலம் பெண் வாக்காளர்களே அதிக அளவில் ஈர்த்து உள்ளார்.

ஆகவே திமுக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் உறுதியாக அமைக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. வாக்குப் பதிவுக்கு பின்பு வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள இடங்களுக்கு மர்ம வாகனங்கள் செல்வதும், மர்ம மனிதர்கள் நடமாட்டமும் அதற்கு எதிராக எழுப்பப்படும் ஆட்சேபனைகளும் கூர்ந்து கவனித்தால் எந்தவித தவறுகள் நடப்பதற்கும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இந்த கருத்து கணிப்புகளையும் மீறி அதிமுக வெற்றி பெற்றால் அத்தகைய வெற்றி என்பது பல்வேறு சந்தேகங்களுக்கும் யூகங்களுக்கும் வழிவகுக்கும்.

மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை பாஜக ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று பலவிதங்களில் முயற்சி செய்து வருவதுடன் பல கட்டங்களாக தேர்தலை நடத்தி தங்கள் வசதிக்கேற்ப பிரச்சார திட்டத்தினை உருவாக்கி எப்படியும் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆக வேண்டும் என்று நம்பிக்கையோடு தேர்தல் பணியாற்றி மே சு&ம் தேதி வரை காத்திருக்கிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் முதல்வர் மம்தா பானர்ஜியும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கடுமையான போராட்டத்திற்கு பின் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்பதை விட அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு எதிரான போரில் வெற்றிப்பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உயிரை பணையம் வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி வெற்றிப்பெற்றால் இந்திய அளவில் அதன் பிரதிபலிப்பு பேசப்படுவதுடன் பாஜக கட்சிக்கு மாற்று சக்தியாக மம்தா பானர்ஜி உருவெடுப்பார். மாறாக பாஜக வெற்றிப்பெற்றால் அந்த வெற்றியின் பின்னால் பல சந்தேக கணைகள் எழுப்படும். உதாரணத்திற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல முன்னணி தலைவர்களின் பாஜக கட்சி தங்கள் பக்கம் இழுத்துள்ளதோடு அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் அளித்துள்ளது. ஆகவே தேர்தல் ஆணையத்தின் உதவியோடு மத்திய படைகளுடன் கொரனா பரவலையும் தாண்டி பாஜக கட்சி மேற்கு வங்காளத்தில் தனது தொடர் பிரச்சாரத்தின் மூலம் வெற்றியடைய முயற்சிக்கிறது.

அஸ்ஸாம் மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும், நேரடி போட்டி நிலவுகிறது. இந்த நேரடி போட்டியில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பெண்மணியான ப்ரியங்காகாந்தி தனது பிரச்சாரத்தின் மூலம் இழந்த ஆட்சியை கைப்பற்றுவதற்கு தேயிலை தோட்டத்தில் தொடங்கி ஊர் ஊராக தெரு தெருவாக சென்று பாதுகாப்பு வளையங்களையும் மீறி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கையும், வாக்கு வங்கியையும் தூக்கி நிறுத்தியுள்ளார். பலமுறை காங்கிரஸ் முதல்வராக இருந்த தருண் கொகை மற்றும் ஈந்தேஸ்வர் சைக்கியா போன்றோர் தங்களது கடினமான உழைப்பால் அஸ்ஸாமில் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்தார்கள். தற்பொழுது இளம் அரசியல் தலைவராகவும் முன்னாள் முதல்வர் தருண் கொகை மகனுமான தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் போகாய் காங்கிரஸ் செல்வாக்கை ஒருங்கிணைத்து பாஜக கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றுவதற்கு பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். ஒருவேளை இத்தகைய முயற்சிகள் வெற்றிப்பெற்றால் அஸ்ஸாமில் பாஜக கட்சி ஆட்சியை இழக்கும் வாய்ப்பு ஏற்படலாம். அல்லது ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்கும் போராடி வெற்றிப்பெற வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.

கேரளாவை பொறுத்தவரை கருத்துக் கணிப்புகள் மூலம் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் என்கின்ற அளவில் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. பாஜக கட்சி கேரளாவிலும் தனது ஆதிக்கத்தின் மூலம் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்து போராடி வருகிறது. காங்கிரஸ் கூட்டணி மிக குறைந்த அளவே வெற்றிப்பெற்றாலும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆக பாஜக கேரளாவில் தோல்வியை தழுவும்.

& டெல்லிகுருஜி